‘மாஸ்க் போடலன்னா அபராதம்’..ஒரே நாளில் ரூ.45 லட்சம் வசூல்!

 

‘மாஸ்க் போடலன்னா அபராதம்’..ஒரே நாளில் ரூ.45 லட்சம் வசூல்!

மும்பையில் மாஸ்க் அணியாதவர்களிடம் ஒரே நாளில் ரூ.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

‘மாஸ்க் போடலன்னா அபராதம்’..ஒரே நாளில் ரூ.45 லட்சம் வசூல்!

அந்த வகையில், மும்பையில் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மும்பை மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த உத்தரவு மும்பை மாநகர் முழுவதும் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், மாஸ்க் அணியாத 23 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.45 லட்சம் ஒரே நாளில் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகிறது.

கடந்த ஒரு வாரத்தில் ரூ.60 லட்சம் வசூலாகி இருப்பதாகவும் அபராத வசூல் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா ஊரடங்கின் போது போடப்பட்ட இந்த உத்தரவு இன்று வரை பின்பற்றப்படுகிறது. இதுவரையில், சுமார் 15 லட்சத்துக்கு மேற்பட்டோரிடம் இருந்து ரூ.30 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மும்பை மெட்ரோ ரயிலிலும் மாஸ்க் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.