ஜோலார்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 45 கிலோ கஞ்சா பறிமுதல் – இளைஞர் கைது

 

ஜோலார்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 45 கிலோ கஞ்சா பறிமுதல் – இளைஞர் கைது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஏ.கஸ்பாவை சேர்ந்தவர் ஜெகன்(27). இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணியில் சேர முயற்சித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், ஜோலார்பேட்டை 6-வது வார்டு வேல் செட்டியார் தெருவில் வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

ஜோலார்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 45 கிலோ கஞ்சா பறிமுதல் – இளைஞர் கைது

இந்த நிலையில், ஜெகன் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஆம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ஜெகனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

அதன் பேரில், ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது, அங்கு சுமார் 45 கிலோ எடையிலான கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஜெகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.