பள்ளி மாணவி வழக்கில் இளைஞருக்கு 44 ஆண்டு சிறை! போக்சோவில் இதுதான் அதிகபட்ச தண்டனை!

பள்ளி மாணவி வழக்கில் இளைஞருக்கு 44 ஆண்டு சிறை! போக்சோவில் இதுதான் அதிகபட்ச தண்டனை!

12ம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்து வந்த 34வயது இளைஞருக்கு 44 ஆண்டு சிறை தண்டைனை விதித்து தீர்ப்பளித்துள்ளது உதகை மகிளா நீதிமன்றம்.

பள்ளி மாணவி வழக்கில் இளைஞருக்கு 44 ஆண்டு சிறை! போக்சோவில் இதுதான் அதிகபட்ச தண்டனை!

நீலகிரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்திருக்கிறார் 34 வயது ஆண்டனி வினோத். மாணவியுடன் காதலித்து ஊர் சுற்றிய ஆண்டன் வினோத், திருமணம் செய்துகொள்வதாக கூறி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி கருவுற்றபோதெல்லாம் மாத்திரைகள் வாங்கிகொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதனால் மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளானதால், விவகாரம் பெற்றொருக்கு தெரியவந்தது. பெற்றோரின் புகாரின் பேரில் உதகை மகளிர் காவலர்கள் ஆண்டனி வினோத்தை கடந்த 2017ம் ஆண்டில் கைது செய்தனர்.

பள்ளி மாணவி வழக்கில் இளைஞருக்கு 44 ஆண்டு சிறை! போக்சோவில் இதுதான் அதிகபட்ச தண்டனை!

உதகை மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணைகள் முடிந்து, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

17 வயது மாணவியை/சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைதண்டனையும், கருக்கலைப்பு செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி மாணவி வழக்கில் இளைஞருக்கு 44 ஆண்டு சிறை! போக்சோவில் இதுதான் அதிகபட்ச தண்டனை!

இளைஞர் ஆண்டனி வினோத்திற்கு மொத்தம் 44 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது உதகை மகளிர் நீதிமன்றம். இளைஞருக்கு 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தில் இதுதான் அதிகபட்ச தண்டனை. வேறு எவருக்கு இத்தனை ஆண்டுகள் தண்டனை இதுவரைக்கும் வழங்கபட்டதில்லை என்று தெரிவித்திருக்கிறார் அரசு வழக்கறிஞர் மாலினி பிரபாகர்.