4442 பணியிடங்களுக்கான அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!

 

4442 பணியிடங்களுக்கான அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!

42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கும்,  STக்கு 89.6, SCக்கு 94.8, OBCக்கு 95 மதிப்பெண்கள் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கும்,  STக்கு 89.6, SCக்கு 94.8, OBCக்கு 95 மதிப்பெண்கள் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில்  கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை பெற்றவர்களை அறிவித்து இருக்கிறார்கள்.

Cut-off விவரம் (Out of 100):

EWS என்னும் உயர் சாதியினர்: 42
ST: 89.6
SC: 94.8
OBC: 95
UR என்னும் பொதுப் போட்டி: 95.2

உயர் சாதிக்கு 42 தான் cut-off என்னும் அடிப்படையில் 453 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள். யார் இந்த உயர் சாதிக்காரர்கள் என்றால் பிறப்பால் உயர் சாதியினர் மட்டும் (ஐயர், ஐயங்கார் போன்றோர்), ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ளோர், 5 ஏக்கர் நிலம் உள்ளோர், 1000 சதுர அடி வீடு உள்ளோர். இவர்கள் சம்பளம் 12,000/- ரூபாய் முதல் 35,480/ வரை. 

மாற்றுத்திறனாளிகள் Cut-off விவரம் (Out of 100)

PH-HH என்னும் செவித் திறன் சிக்கல் உள்ளோர்: 64.2
PH-OTR என்னும் வேறு உடல் திறன் சிக்கல் உள்ளோர்: 78.4
PH-VH என்னும் பார்வைத் திறன் சிக்கல் உள்ளோர்: 85.8
PH-OH என்னும் கை, கால் முடக்கம் போன்ற சிக்கல் உள்ளோர்: 88.8

பார்வைத் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 85.8, ST மக்களுக்கு 89.6, 95.2 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற OBC மக்கள் மட்டும் 1944 பேர்!

அப்படி என்றால் 42 முதல் 95.2 மதிப்பெண்ணுக்குள் எத்தனையோ கோடி தகுதியான SC, ST,
OBC மக்கள் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விட்டு விட்டு 453 உயர் சாதி வகுப்பினருக்கு வேலை வழங்கியுள்ளனர். நம் பிள்ளைகள் சமச்சீர் கல்வியில் படித்து 500க்கு 450 மேல் வாங்கினால் மனப்பாடம் செய்கிறோம், மாநிலக் கல்வி தரம் இல்லை என்கிறார்கள். ஆனால், இவர்கள் வேலை கொடுத்துள்ள 42% என்பது என்ன? 500க்கு 210 மதிப்பெண்கள். 

உயர் சாதியினர் இட ஒதுக்கீடு இல்லாமல் பொதுப்போட்டியிலேயே 1136 பேர். இது 25%. எனவே தான், முன்னேறிய சாதிகளுக்கு அவர்கள் மக்கள் தொகையை ஒப்பிட ஏற்கனவே போதுமான வாய்ப்புகள் உள்ளன. தனியாக இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிறோம்.இது பத்தாது என்று EWS மூலம் இன்னும் 10%. ஆக, 3% மக்கள் 35% வேலை வாய்ப்புகளைக் கொள்ளை அடித்துக் கொண்டு போக,  97% மக்கள் 65% இடங்களுக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள் .