“மாசம் ரெண்டு லட்சம் சம்பளம் இவருக்கு பத்தலையாம்” -ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் பண்ண வேலைய பாருங்க .

“மாசம் ரெண்டு லட்சம் சம்பளம் இவருக்கு பத்தலையாம்” -ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் பண்ண வேலைய பாருங்க .

ஆடம்பர வாழ்க்கைக்கு சம்பளம் பத்தாததாலும் ,கடன் வாங்கியவர் கொடுக்காததாலும் ஒரு என்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார் .

“மாசம் ரெண்டு லட்சம் சம்பளம் இவருக்கு பத்தலையாம்” -ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் பண்ண வேலைய பாருங்க .

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் , 44 வயதான நரிசெட்டி பாலா ஸ்ரீதர்  என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்)என்ற  ஐடி நிறுவனத்தில் மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் ஹைதராபாத்தின் அமீர்பேட்டையின் சித்தார்த்த நகரில் தனது மனைவி பத்மா மற்றும்  இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் கடந்த ஆறு மாதமாக கடுமையான நிதி சிக்கலில் தவித்து வந்தார் .அவர் என்ஜினீயர் என்பதால் வசதியாக ,ஆடம்பரமாக பணத்தை செலவு செய்து வாழ்ந்து வந்தார்கள் .கார் மற்றும் வீடு ஆகியவை சொந்தமாக இருந்தாலும், அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு சம்பளம் பற்றாக்குறையாக இருந்துள்ளது .மேலும் அவரிடம் சிலர் 40 லட்சம் ரூபாய் கடனை வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்கள் .

அந்த பணத்தை அவர் பலமுறை அவர்களிடம் கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை .இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீதர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார் .இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்ரீதரின் மனைவி தனது குழந்தைகளுடன் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற போது, ஸ்ரீதர் வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .பின்னர் வீட்டிற்கு திரும்பிய அவரின் மனைவி தன்னுடைய கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு மயக்கமடைந்தார் .பிறகு  அவரின் சகோதரர் குமார்  போலீசுக்கு தகவல் சொன்னார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ,ஸ்ரீதரின் உடலை பிரேத பரிசோதனைக்கும் ,மயக்கமடைந்த  அவரின் மனைவியை மருத்துவமனைக்கும் அனுப்பினார்கள் .

“மாசம் ரெண்டு லட்சம் சம்பளம் இவருக்கு பத்தலையாம்” -ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் பண்ண வேலைய பாருங்க .