darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



எழும்பூர்- தாம்பரம் இடையே நாளை 44 ரயில் சேவைகள் ரத்து!

Train
Train

சென்னை எழும்பூர்- தாம்பரம் இடையே செயல்படும் 44 ரயில் சேவைகள் பராமரிப்புப் பணி காரணமாக நாளை  ரத்து செய்யப் படுகின்றன. காலை 11.15 மணி முதல் மாலை 3.15 வரை , சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் 13 ரயில்களும், தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் 14 ரயில்களும், சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் 7 ரயில்களும், சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூர் வரை செல்லும் 5 ரயில்களும் ரத்து செய்யப் படுகின்றன. 

Train

மேலும், எழும்பூர்- தாம்பரம்  வழியே செல்லும் அரக்கோணம் மற்றும் காஞ்சிபுரம் ரயில்களும் ரத்து செய்யப் படுகின்றன. பயணிகள் சிரமத்தைத் தடுக்க சில சிறப்பு ரயில்கள் இயக்கப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

சிறப்பு ரயில்களின் விவரம் : 

செங்கல்பட்டு- சென்னை கடற்கரை : 10:55, 11:30, 12:20, 1:00, 1:50 
காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை:  9:15 
திருமால்பூர்- சென்னை கடற்கரை: 10:40 
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு: 6 ரயில்கள் 
சென்னை கடற்கரை- தாம்பரம்: 1 ரயில் 
சென்னை கடற்கரை- அரக்கோணம்: 1 ரயில் 

2018 TopTamilNews. All rights reserved.