அந்த நாலு பேருக்கும் நன்றி சொன்ன சசிகலா!

 

அந்த நாலு பேருக்கும் நன்றி சொன்ன சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 10 கோடியே 10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டையை அனுபவித்து வருகிறார் சசிகலா. தண்டனை காலம் முடிவடைந்துள்ளதால் அபராதத்தொகையினை செலுத்தினால் வரும் ஜனவரி மாதம் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில், அபராத தொகையான 10 கோடியே 10 லட்சம் ரூபாயினை செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

அந்த நாலு பேருக்கும் நன்றி சொன்ன சசிகலா!

இந்நிலையில் அந்த அபராத தொகைக்கான டி.டியினை சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்குமார் கோர்ட்டில் வழங்கியிருக்கிறார். அதுகுறித்த விபரம் வெளியாகி இருக்கிறது.

சசிகலாவுக்கான அபராத தொகையினை நான்கு பேர் செலுத்தி இருக்கிறார்கள். பழனிவேல், வசந்தா தேவி, ஹேமா, விவேக் ஆகிய 4 பேரும் அந்த தொகையினை செலுத்தி இருக்கிறார்கள்.

ஆக்ஸிஸ் வங்கியில் ரூ 3 கோடிக்கு ஹேமா பெயரில் டி.டி. எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்பிஐ வங்கியில் பழனிவேல் பெயரில் ரூ.3.25 லட்சம் டி.டி. எடுக்கப்பட்டிருக்கிறது. அதே போல், ஆக்ஸிஸ் வங்கியில் விவேக் பெயரில் 10 ரூபாய்க்கான டி.டியும், எஸ்.பி.ஐ. வங்கியில் வசந்தா தேவி பெயரில் 3.75 கோடிக்கான டி.டியும் எடுக்கப்பட்டிருக்கிறது.

அபராத தொகை செலுத்தப்பட்டுவிட்டதால் ஜனவரி 27ம்தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று தெரிகிறது. டி.டி. செலுத்தப்பட்ட தகவல் தெரியவந்ததும், சிறை நிர்வாகம் மூலமாக தனது வழக்கறிஞரிடம், அந்த நாலு பேருக்கும் நன்றி சொன்னதாக என்று சொல்லி இருக்கிறார் சசிகலா.