டெல்லி எல்லையில் நீடிக்கும் பதற்றம்; 44 பேர் அதிரடி கைது!

 

டெல்லி எல்லையில் நீடிக்கும் பதற்றம்; 44 பேர் அதிரடி கைது!

டெல்லி-ஹரியானா எல்லையான சிங்குவில் வன்முறையில் ஈடுபட்ட 44 பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்து, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லி எல்லையில் நீடிக்கும் பதற்றம்; 44 பேர் அதிரடி கைது!

டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியதையடுத்து, டெல்லி எல்லைகளில் மீண்டும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்தனர். இச்சூழலில், டெல்லி-ஹரியானா எல்லையான சிங்கு, டெல்லி-உபி எல்லையான காஸிப்பூர் மற்றும் டிக்ரியிலிருந்து விவசாயிகளைத் திரும்பிச் செல்லுமாறு டெல்லி காவல் துறையினர் வற்புறுத்தினர். ஏராளமான காவலர்களை ஆயுதங்களுடன் களமிறக்கினர்.

டெல்லி எல்லையில் நீடிக்கும் பதற்றம்; 44 பேர் அதிரடி கைது!

இதன்மூலம் விவசாயிகளை அச்சமூட்டி பார்த்தது. அதுமட்டுமில்லாமல் உள்ளூர் மக்கள் எனக் கூறி சில குண்டர்களை இறக்கிவிட்டு விவசாயிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குண்டர்கள் பாஜகவின் துணை அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. என்ன செய்தாலும் விவசாயிகள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரும்பிச் செல்ல மறுத்த விவசாயிகளை காவலர்கள் லத்தியாலும் குண்டர்கள் கற்களை வீசியும் தாக்கினர். பதிலுக்கு விவசாயிகளும் தாக்கியதால் டெல்லியின் எல்லைகளில் கலவரம் ஏற்பட்டது.

டெல்லி எல்லையில் நீடிக்கும் பதற்றம்; 44 பேர் அதிரடி கைது!

தற்போது இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட 44 பேரை டெல்லி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அலிப்பூர் காவல் அதிகாரி பிரதீப் பலிவாலைத் தாக்கிய 22 இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரின் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவுசெய்துள்ளனர். காவல் அதிகாரியைத் தாக்கிய நபர் பஞ்சாப் மாநிலம் காஸம்புர் கிராமத்தைச் சேர்ந்த பிஎஸ் ரகு என்றும், அவரை கலவர இடத்திலேயே கைது செய்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கு எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவிவருவதால் அந்தப் பகுதிக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.