மகள் குளிக்கும் வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்ட தாய்க்கு 155 வருடங்கள் சிறை !!

 

மகள் குளிக்கும் வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்ட தாய்க்கு 155 வருடங்கள் சிறை !!

பேஸ்புக்கில் 5 வயது மகள் குளிப்பதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்ட 43 வயது தாயை அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாகாண போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு தீர்ப்பளித்த நீதிமன்றம் 155 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இதுவரை கண்டிராத மோசமான வழக்கு என நீதிபதி வேதனை தெரிவித்தார்.
சோமர்ஸ் என்பவர் பேஸ்புக்கில் 5 வயது மகள் குளிக்கும் வீடியோவை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் தொழில்நுட்பக் குழுவை வைத்து ஹேவின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து அவர்தான் குற்றவாளி என உறுதிப்படுத்தினர். இந்த வீடியோ மட்டுமின்றி ஏராளமான வீடியோவை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார். உஷாராக அவரது போட்டோ எதுவும் பேஸ்புக்கில் பதியவில்லை.

மகள் குளிக்கும் வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்ட தாய்க்கு 155 வருடங்கள் சிறை !!
மெர்சர் கவுண்டி சர்க்யூட் நீதிமன்ற நீதிபதி வில்லியம் சாட்லர், இந்த குழந்தைக்கு ஏற்பட்ட வாழ்நாள் சேதங்களின் அடிப்படையில் 43 வயதானவருக்கு தண்டனை வழங்கியதாக கூறினார். இதுகுறித்த நீதிபதி தெரிவிக்கையில் நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாக இருக்கிறேன். இது நான் அனுபவித்த மிக மோசமான மற்றும் பயங்கரமான வழக்குகளில் ஒன்றாகும். இந்த வீடியோவால் இந்த குழந்தை இந்த அவமானத்தில் இருந்து வெளியில் வரமுடியாது.
எனவே அந்த தாய்க்கு பாலியல் வன்கொடுமை தொடர்பான 2 வழக்குகளில் 25 முதல் 100 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பெற்றோர் அல்லது பாதுகாவலரால் 2 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்காக அவருக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இது ஹேவிக்கு 45 முதல் 155 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளித்ததாக தெரிகிறது.