Home உலகம் இஸ்ரேஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 43 பாலஸ்தீனர்கள் பலி - போர் மூளும் அபாயம்… கலக்கத்தில் உலக நாடுகள்!

இஸ்ரேஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 43 பாலஸ்தீனர்கள் பலி – போர் மூளும் அபாயம்… கலக்கத்தில் உலக நாடுகள்!

கிழக்கு ஜெருசலேம் நகரை யார் கைப்பற்றுவது என்ற யுத்தம் இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. அந்த நகரை இஸ்ரேல் முழுவதுமாகக் கைப்பற்ற துடிக்கிறது. பாலஸ்தீனர்களோ ஜெருசலேம் எங்களது தலைநகர் விட்டு கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக இருக்கின்றனர். இதனால் இரு பிரிவினருக்கும் அவ்வப்போது மோதல் வெடிப்பதும் பின்னர் அமைதி காப்பதும் வாடிக்கையாகிப் போனது. ஆனால் இம்முறை வெடித்துள்ள மோதலானது 2014ஆம் ஆண்டு காஸாவில் நிகழ்ந்த போரை நினைவுப்படுத்தியுள்ளது.

இஸ்ரேஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 43 பாலஸ்தீனர்கள் பலி - போர் மூளும் அபாயம்… கலக்கத்தில் உலக நாடுகள்!
Israel hits Gaza with airstrikes as Netanyahu vows to step up attacks on  Hamas | Hindustan Times

1967ஆம் ஆண்டு மே 9ஆம் தேதியன்று கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில், ரமலான் மாதத்தின் இறுதி நாள்களில் இஸ்லாமியர்கள் அதிகப்படியாக வசிக்கும் பகுதிகளின் வழியாக யூதர்கள் கொடி அணிவகுப்பு நடத்துவார்கள். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் கடும் மோதல் வெடிக்கும். இந்தாண்டும் இந்த ரமலான் மாதத்தில் கடந்த திங்கட்கிழமை உரசல் ஆரம்பித்தது. பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் தாக்கிக் கொண்டதில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர்.

Israel Airstrikes Kill 20 In Gaza, Palestinians Say, After Militants Fire  Rockets At Jerusalem

இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சொன்னது போலவே இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்வாறாக இரு தரப்பும் மாறி மாறி வான்வழி தாக்குதலை நிகழ்த்தினர். மோதல் உச்சம் பெறவே ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக 200 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவினர்.

இஸ்ரேஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 43 பாலஸ்தீனர்கள் பலி - போர் மூளும் அபாயம்… கலக்கத்தில் உலக நாடுகள்!

பல ராக்கெட்டுகளை இஸ்ரேல் விமானப்படை எதிர்த்து தவிடுபொடியாக்கியது. ஆனால் சில ராக்கெட்டுகள் இஸ்ரேலில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து வெடித்துள்ளது. இந்த விபத்தில் தான் கேரளாவைச் சேர்ந்த செவிலி சௌமியா உள்டப 35 மக்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ச்சியாக ராணுவ தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் 43 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். நிலைமை கையை மீறிப் போவதால் உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரு தரப்புக்குள் இணக்கமான சூழல் உருவாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இஸ்ரேஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 43 பாலஸ்தீனர்கள் பலி - போர் மூளும் அபாயம்… கலக்கத்தில் உலக நாடுகள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம்!

ஈரோடு பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் நிவாரண பொருட்களை வழங்கினார். ஈரோடு மாவட்டம்...

20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து… தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் மேலும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன் நில நிர்வாக ஆணையராகவும் திருவண்ணாமலை ஆட்சியராக...

“விஐபி பாதுகாப்பு பணியிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு” – ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ‘கைதி’ தயாரிப்பாளர்!

ஒரு மாநிலத்தின் மிக மிக முக்கிய நபர் (விஐபி) என்றால் அது முதலமைச்சர் தான். அவரைப் போற்றுபவர்களும் இருப்பார்கள். இகழ்பவர்களும் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்....

பெண் காவலர்கள் இனி வழிநெடுக காத்திருக்க வேண்டாம்… ஸ்டாலின் சொன்னதால் டிஜிபி அதிரடி உத்தரவு!

முதல்வர் அல்லது விஐபிக்கள் அலுவல் ரீதியாக பயணிக்கும் போது பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். ஆண்களுக்கு நிகராக பெண் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இந்த நிலையில்,...
- Advertisment -
TopTamilNews