43 மில்லியன் கடிதங்கள்… சாதனைப் படைத்த அஞ்சல் துறை!

 

43 மில்லியன் கடிதங்கள்… சாதனைப் படைத்த அஞ்சல் துறை!

விரல் நுனியில் உலகத்தை சுருக்கி விஞ்ஞான காலத்தில், அஞ்சலங்களையும், வாழ்த்து அட்டைகளையும் மறந்து விட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை. 90’ களில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும், பிறந்த நாள் விழாக்களையும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அஞ்சலங்கள் மூலமாக அனுப்பிய வாழ்த்துக்கள் கொடுத்த சந்தோஷமும், மகிழ்ச்சியும் வேற.

விரல் நுனியில் உலகத்தை சுருக்கி விஞ்ஞான காலத்தில், அஞ்சலங்களையும், வாழ்த்து அட்டைகளையும் மறந்து விட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை. 90’ களில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும், பிறந்த நாள் விழாக்களையும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அஞ்சலங்கள் மூலமாக அனுப்பிய வாழ்த்துக்கள் கொடுத்த சந்தோஷமும், மகிழ்ச்சியும் வேற. அந்த நினைவுகளை சேமித்த காலங்கள் வேறு. வாழ்த்து அட்டைகளை வாங்கி, அவர்களின் கையெழுத்தை ஸ்பரிசிக்கும் போது ஏற்படுகிற உணர்வுகளும், வருகிற மெல்லிய புன்னகையும், தற்போது வாட்ஸப், பேஸ்புக் போன்ற செயலிகளில் கடல் கடந்து இருப்பவர்களுக்கு சட்டென நொடி பொழுதில் பகிர்ந்து கொள்ளும் வாழ்த்துகள் சந்தோஷத்தைத் தருவதில்லை!
பல சாதனைகளை செய்திருக்கிற இந்திய அஞ்சல் துறை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. காமன்வெல்த் நாடுகளில் ஏர்மெயில் தபால் தலை வெளியிட்ட முதல் நாடு இந்தியா தான்.

letters

உலகின் முதல் அதிகாரப்பூர்வ விமான அஞ்சல் இந்தியாவில் பிப்ரவரி 18, 1911 அன்று நிகழ்ந்தது. 1861 ஆம் ஆண்டிலேயே, இந்தியாவில் 850 க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களும், அவை ஆண்டுக்கு கிட்டத்தட்ட 43 மில்லியன் கடிதங்களையும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான செய்தித்தாள்களையும் கையாண்டன.
 சுதந்திர இந்தியாவின் முதல் தபால் தலை நவம்பர் 21, 1947 அன்று வெளியிடப்பட்டது. அதில் இந்திய தேசியக்கொடியுடன் கூடிய ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பின் முதலாம் ஆண்டு நினைவாக 1948 ல், மகாத்மா காந்தியின் நினைவாக தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது.  

india stamp

1949 ஆம் ஆண்டில், இந்து, புத்த, முஸ்லீம், சீக்கிய மற்றும் சமண கோவில்கள், சிற்பங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் கோட்டைகள் உள்ளிட்ட இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையிலான தபால் தலைகளை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது. இந்திய தபால் அலுவலக சட்டம் 1898, மார்ச் 22 – 1898 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டு 1898 ஆம் ஆண்டு ஜூலை 1, முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு முன் 1882 ஆம் ஆண்டின் சட்டம் III மற்றும் 1896 ஆம் ஆண்டின் சட்டம் XVI ஆகியவை நடைமுறையில் இருந்தன.
ஆசியாவிலேயே முதன் முதலில் ஸ்டிக்கர் போன்ற தபால் தலைகள் சிண்டேயில் (தற்போதிய பாகிஸ்தான்) ஜூலை 1852 ல்  வெளியிடப்பட்டது.  பர்மா, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், போர்ச்சுகல், எத்தியோப்பியா போன்ற நாடுகளிலும் இந்தியாவில் தபால் தலைகள் அச்சிடப்பட்டன.