மத்திய நிதியமைச்சர் தலைமையில் தொடங்கியது 42-ஆவது ஜிஎஸ்டி கூட்டம்!

 

மத்திய நிதியமைச்சர் தலைமையில் தொடங்கியது  42-ஆவது ஜிஎஸ்டி கூட்டம்!

ஜிஎஸ்டி இழப்பீட்டு விவகாரம் குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம் தொடங்கியது.

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்கள் அரசின் திட்டங்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதாவது, ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு பதிலாக ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் தலைமையில் தொடங்கியது  42-ஆவது ஜிஎஸ்டி கூட்டம்!

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 42வது ஜிஎஸ்டி கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை வேறு திட்டத்தின் மூலம் ஈடு செய்யாமல் முறையாக உரிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என நிதியமைச்சரிடம் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

மத்திய நிதியமைச்சர் தலைமையில் தொடங்கியது  42-ஆவது ஜிஎஸ்டி கூட்டம்!

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்க வேண்டியது நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.