’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

 

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

ஞாயிற்றுக்கிழமை. கமல் வரும் எப்பிசோட். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை எப்பிசோட்களில் நிறைய பஞ்சாயத்துகள் தீர்க்கப்படும்.. சில ஊதி பெருக்கப்படும். ஆனாலும் அநேகம் ஹாப்பி எண்டிங்தான். நேற்றும் அப்படித்தான் என்றாலும், பஞ்சாயத்து தலைவரையே சிக்க வைக்க நடந்த சம்பாஷனைகளே ஆடியன்ஸையே ஜெர்க்காக்கின.

42-ம் நாள்

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

‘நதிகளைக் காப்போம்… சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு நல்ல முறையில் விட்டுச்செல்வோம்’ என முதன்நாள் பேச்சில் விட்டுப்போன சில விஷயங்களைப் பேசியதோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார் கமல்.

செடிகளைப் பத்தின விசாரணையோடு அகத்திற்குள் நுழைந்தார். சாப்பாட்டை வேஸ்ட் செய்தது பற்றி பேச்சு நகர்ந்தது. இதுதான் நம்ம ஏரியா என்று ஆரி புகுந்து லெக்சர் அடிக்க, ஷனம் குறுக்கே புகுந்தபோது ‘கொட்டியது நானாகவும் இருக்கலாம்’ என அவரின் வாக்கியத்தை நக்கலடித்தார். ஆனால், அது கடைசி வரை ஷனம்க்கு புரியவே இல்லை. ம்ஹூம்.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

சாப்பாட்டில் பார்ஷியாலிட்டியா என்ற வாதம் கொஞ்ச நேரம் ஓடியது. அதில் ஒண்ணும் சுவாரஸியமில்லை. அதனால், செடிகளைப் பார்க்க விரும்புகிறேன் என வண்டியைத் திருப்பினார் கமல்.

எல்லோரும் செடியைக் கொண்டு வந்து காட்ட, எல்லோ செடிகளையும் ரம்யா கவனித்துக்கொள்வதாகச் சொல்ல வாழ்த்துகளை வாங்கிக்கொண்டார். அதுவும் பட்டுப்போன செடித் தொட்டியில் வெந்தயம் விதைத்து வளர்த்தாராம். ரம்யா ஆர்மிக்கு செம கண்ட்ண்ட். ஆர்கானிக் செடி வளர்த்த அரசி ரம்யா… என்றெல்லாம் ட்விட்டுவார்கள்.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

செடிகளை வைச்சே கின்னஸ் சாதனை செய்த ஆரி, தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு செடியை ஒழுங்காக வளர்க்கல. ஒருவேளை செடிகளை அளிப்பது மட்டும்தான் அவர் வேலை போல. அதை விட கஷ்டம் வளர்ப்பது. பிக்பாஸின் ரூல்ஸ் எதையும் ஃப்லோ பண்ணாத பாலா, செடியையும் வளர்க்க வில்லை என்பது தெரிந்தது. இறுதியாக, ஆர்கானிக் விதைகளும் உரங்களும் அனுப்புவதாக கமல் சொன்னது ரம்யா ஹேப்பி.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் பற்றி பேச்சை நகர்த்தினார் கமல். விசாரணையின்போது ‘திருடன் கையிலேயே சாவி’ என்றதும், ஆடியன்ஸைப் பார்த்து பேசி, அதை அரசியல் பன்ச்சாக மாற்றினார். ஆனா, கமல் சார், நீங்க தெளிவா இவர்தானு ட்விட் செய்தாலே பலருக்குப் புரியாது. இப்படி சந்துல சிந்து பாடினா… சுத்தம்.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

ஹானஸ்ட், ஹானாஸ்ட்டி பற்றிய விஷயத்துக்கு வந்தார் கமல். கேபி ஏற்கெனவே சொன்னதை திரும்ப விளக்க, ஷிவானிதான் ஊக்குவித்தார் என்ற ரகசியத்தைச் சொல்லாதிருக்க பாலா குட்டிக்கரணம் எல்லாம் போட்டார். ஆனா, கமல் போட்டு உடைக்க நினைக்க, நானே அப்ரூவராகிறேனு சுசி, ஷிவானிதான் டிரிகர் பண்ணினாருனு தெறிக்க விட்டு பல்டி அடித்தார் சுசி. இப்போது மட்டுமல்ல, பல பஞ்சாயத்துகளில் டப்ப்ன்னு சரணாகதி ஆவதல் சுசித்ராவின் இயபாகி விட்டதைப் பார்க்க முடிந்தது. அப்பாடா எனக்கு வேலை ஈஸியானது என ரிலாக்ஸாகினார் கமல்.

ஹானஸ்ட் என்ற வார்த்தையை பாலாஜிதான்  என்பதை கமல் சொன்னது சரி. ஆனால், அது ஹவுஸ்மேட்ஸ்க்குப் புரியல. ஒரு குறும்படம் போட்டுக்காட்டியிருந்தால் செமையாக இருந்திருக்கும். எப்படிக் காட்டுவார் பிக்கி, ஏன்னா, அவரே பாலாவைக் காப்பாற்ற நினைப்பவர். அவர் ஜெயிலுக்குச் செல்ல வாய்ப்பிருக்கும் வாரங்களில் ஜெயில் ஆப்ஷனையே நீக்கி விட்டவர். எனவே பாலாவைப் பற்றிய குறும்படத்திற்கு வாய்ப்பில்லை.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

கேப்டன் ஆரி பாஸ் மார்க் வாங்கினாரா என்ற விசாரணையை ஸ்டார்ட் பண்ணினார் கமல். முதல் ஆளாய் ‘வேற எந்தப் பஞ்சாயத்திலும் மூக்கை நுழைக்கல… அதுவே பெரிய விஷயம்தான்’ என முதல் பாராட்டை வாசித்தார் பாலா. அது ஆரிக்குமே ஆச்சர்யம்தான்.

ஷனமும் பாராடி லேசாக இடித்தார். அனிதா பாராட்டாகத் தொடங்கி, குறை சொல்லி முடித்தார். ‘நமக்கு என்னாத்துக்கு வம்பு’ என ஆரி ஒதுங்கியிருந்தார் என்பதே அனிதாவின் பிராது.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

‘இந்த வாரம் லேட்ட சாப்பாடு வந்துச்சு’னு புகார் வாசித்தார் சம்யுக்தா. அப்படியே பேசி, சுசித்ரா – ரமேஷ் சண்டை, அனிதா – ஆரி சண்டை, ஷனம் – ஆரி சண்டைன்னு பல ரவுண்ட் போனது.

சுசி – ரமேஷ் சண்டையைப் பேசித் தீர்க்க சுசி முன்வரல… ஆனா, இன்னொரு சண்டையில அனிதாவுக்கு சப்போர்ட் பண்ணினதும் டென்ஷனாகிட்டேன் என ஆரி சொல்லியபிறகு எழுந்த சுசி பெரிய குறை சொல்லப்போறார்ன்னு நினைச்சா, ஆரி ஈஸ் குட் கேப்டன் என்று சொல்லிட்டு உட்காந்துட்டார். உங்க பல்டியைப் புரிஞ்சிக்கவே முடியலையே சுசி.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

அனிதாவுக்கு சில விளக்கங்கள் கொடுக்கணும்னு முன்வந்தார். ஏற்கெனவே நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார். அதனால், மீண்டும் பேச ஆரம்பித்து வண்டியை ஒரே இடத்தில் ஓட்ட ஆரம்பித்ததும், ‘எனக்கு புரிஞ்சிட்டுச்சு… வீட்டுல யாருக்காவது புரியல்லன்னா தனியா பேசி புரிய வைங்க’னு சட்டென்று கதைவைச் சாத்தினார் கமல். அனிதா முகம் இருண்டது.

கமல் பிரேக் விட்டுச் சென்றிருந்த நேரத்தில் ஷனமிடம் அனிதா அணத்திட்டு இருந்தார். ‘நான் ஒண்ணுமே செய்யல, கமல் சார் ஏன் பேசவே விட மாட்டேங்குறார்’னு பஞ்சாயத்து தலைவரையே விசாரணை கூண்டில் ஏற்றும் ஐடியாவை இறக்கினார். அதைக் கேட்டு ஷனம்க்கு கொஞ்சம் ஜெர்க்தான்.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

கமல் பற்றிய ஏதாவது தப்பா கமெண்ட் பண்ணிடுவோம்னு ஒரு அலர்ட் அவர் மனசில் இருந்ததால, ‘உன் மேல வருத்தமா இருக்கார் அவர்’னு பொதுவாகச்  சொல்லி வைச்சார். பேச ஸ்பேஸ் கொடுக்கலனு இதுவரை ஹவுஸ்மேட்ஸைத்தான் சொல்லி வந்தார். அதுவும் அடிக்கடி மாட்டுவது ரியோதான். அரை மணி நேரம் அனிதா பேசி முடித்ததும், ரியோ பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் நான் இன்னும் பேசிமுடிக்கல… என அதிர வைப்பார் அனிதா. இப்போ அவரின் பிராது கமல் மீதேவா? நடக்கட்டும்… நடக்கட்டும்.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

இடைவெளிக்குப் பிறகு வந்தவர், ‘போரிங் பர்ஃபாமர் யார் என்ற கேள்வியை வீசினார். நானே முன்வாரேன்னு ஷனம் வந்தார். ‘பாலா பையன் என்பதால் என் கேரக்டரைச் செய்யல’னு ஷனம் சொல்ல, ‘பாசமலரில் சிவாஜி – சாவித்திரி அண்ணன் – தங்கை நவராத்திரியில் காதலர்கள்.. நடிகர்கள் இதெல்லாம் பார்க்கக்கூடாதுனு ஒட்டாத லாஜிக் ஒன்றை உதாரணமாகச் சொன்னார் கமல். ஷனம் போல பாலாவும் ஒத்துப்பார் என ரமேஷ் நினைத்துப் பார்க்க, அவர் ஜம்மென்று உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஜெர்க் ஆகி, பாலாவை நாமினேட் செய்தார் ரமேஷ்.

நான் நாலு போட்டியில ஜெயிச்சிருக்கேனு உதார் காட்டினார். ‘தங்கச்சியைப் பத்திரமா பார்த்துகிட்டேன்’ என்றதும் ஹவுஸ்மேட்ஸ் கைத்தட்டினார்கள். எதிர்த்து பேச யாருக்கும் துணிச்சல் இல்லை. ரம்யா மட்டும், இந்த வாரம் நிறைய ஃபெஸ்டிவல் டாஸ்க் இருந்துச்சு. அதனால லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை வெச்சுதான் முடிவு பண்ணனும்’னு சொன்னார்.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

வேறு வழியில்லாமல் தானே வந்து தலையைக் கொடுத்த ஷனமை பலியாடாக வெட்டி, போரிங் என முத்திரை குத்தினர் கமல் உட்பட.

உங்களை யார் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்திருப்பார் என யூகியுங்கள் என்று வில்லங்க டாஸ்க்கைத் தொடுத்தார் கமல். ஆனால், அது புரியாமல், தான் யாரை நாமினேட் பண்ணினேன் என்று நிஷா சொல்லத் தொடங்க, ரியோ ஓடிப்போய்த் தடுத்தார். அதற்குள் ஷனம் எனும் ஒரு பெயரைச் சொல்லியும் விட்டார்.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

சுசியும் ஆரியும் தன்னை நாமினேட் செய்திருக்கக்கூடும் என அர்ச்சனாவும், சுசியும் அனிதாவும் என ரியோவும், அனிதாவும் பாலாவும் என சோம்ஸூம், ஷனம்தன் என ரமேஷ், சுசியும் சொன்னார்கள்.

சம்யுக்தாவின் பெயரைச் சொன்னது ஆரியும் அனிதாவும். அனிதா சொன்ன பெயர் சம்யுக்தா. ஆரி என சொன்ன மூவர் கேபி, ஆஜித், நிஷா. ட்ரியோ கூட்டணி என சொன்னது சம்யுக்தா. இப்படி ஒருவருக்கொருவர் சண்டையை மூட்டி விடும் பணியைச் செவ்வனே செய்த கமல் நிம்மதியா இருங்க என்று வாழ்த்தி விடைபெற்றார். இனிமே எங்கேருந்து சார் நிம்மதியா இருக்கிறதுனு புலம்பிய குரல் நிஷாவினுடையது.

’பேசவே விடமாட்டேங்குறார்’ அனிதாவின் ஹிட் லிஸ்டில் இப்போது யார் தெரியுமா? #பிக்பாஸ்4

கமல் இன்று அறிமுகப்படுத்திய புத்தகம். புவியரசு மொழிபெயர்த்த ’மிர்தாதி புத்தகம்’ புவியரசு பற்றி சில வார்த்தைகள். ஹேராம் திரைக்கதை புத்தகமாக்குவதில் புவியரசுகாட்டிய பிடிவாதம் பற்றி சில வார்த்தைகள் பேசினார். கமலின் புத்தக பரிந்துரை என்பது அவரின் நண்பர்களின் நூல்கள் எனுமளவில் சுருங்கி வருகிறது.