அதிகரிக்கும் மரணங்கள்…ஒரே நாளில் 4205 பேர் பலி: இந்தியாவை உலுக்கி எடுக்கும் இரண்டாம் அலை!

அதிகரிக்கும் மரணங்கள்…ஒரே நாளில் 4205 பேர் பலி: இந்தியாவை உலுக்கி எடுக்கும் இரண்டாம் அலை!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி எடுத்து வருகிறது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய சுகாதாரத்துறை போராடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. பாதிப்பு அதிகமாக இருந்த டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்போது பாதிப்பு குறைந்து வருவதாகவும் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகரிக்கும் மரணங்கள்…ஒரே நாளில் 4205 பேர் பலி: இந்தியாவை உலுக்கி எடுக்கும் இரண்டாம் அலை!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் 4205 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும் 3,55,338 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாகவும் 37,04,099 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் மரணங்கள்…ஒரே நாளில் 4205 பேர் பலி: இந்தியாவை உலுக்கி எடுக்கும் இரண்டாம் அலை!

மேலும், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 2,33,40,938, குணமடைந்தோர் எண்ணிக்கை 1,93,82,642, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,54,197 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் 4 லட்சத்துக்கு மேல் பதிவான ஒரு நாள் கொரோனா பாதிப்பு தற்போது 3.48 லட்சமாக குறைந்திருந்தாலும், உயிரிழப்போர் எண்ணிக்கை 4,205 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.