புதிய அமைச்சரவையில் 42% பேர் மீது கிரிமினல் வழக்கு

 

புதிய அமைச்சரவையில் 42% பேர் மீது கிரிமினல் வழக்கு

இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2019 ஆம் ஆண்டு பதவியேற்றது. ஆனால் அப்போதுமுதல் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றப்படாததையடுத்து கடந்த புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 43 புதிதாக மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திலிருந்த 8 பேரும், குஜராத்திலிருந்து 6 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். தமிழகத்திலிருந்து பாஜக முன்னாள் தலைவர் எல். முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

புதிய அமைச்சரவையில் 42% பேர் மீது கிரிமினல் வழக்கு

இந்நிலையில் பிரதமர் மோடியின் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவர்களில் 42 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும், 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக பதவியேற்ற 24 அமைச்சர்கள் மீது தீவிர குற்ற வழக்குகளான கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.