குறையும் பாதிப்பு… அதிகரிக்கும் மரணங்கள் : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

குறையும் பாதிப்பு… அதிகரிக்கும் மரணங்கள் : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.57 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, வட மாநிலங்களில் பாதிப்பு பெருமளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இரண்டாம் அலையில் இருந்து மீண்டு வருவோம் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறையும் பாதிப்பு… அதிகரிக்கும் மரணங்கள் : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 4,194 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை தந்தாலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,57,630 ஆக உயர்ந்திருப்பதாகவும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 29,23,400 ஆக குறைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

குறையும் பாதிப்பு… அதிகரிக்கும் மரணங்கள் : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

நேற்று முன்தினம் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2.75 லட்சம், நேற்று 2.59 லட்சமாக இருந்த நிலையில் இன்று பாதிப்பு 2.57 லட்சமாக குறைந்துள்ளது. எனினும், கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து 4 ஆயிரத்துக்கு மேல் பதிவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.