மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா… மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!

மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா… மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதி தீவிரமாக இருக்கிறது. முதல் அலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இரண்டாம் அலையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோரும் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.

மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா… மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!

சாமானியர்களையும் விட்டுவைக்காமல் கொரோனா தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. குறிப்பாக சிறைக் கைதிகளும் கொரோனா தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். தற்போது புதுச்சேரியிலுள்ள காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 41 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா… மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!

இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தப்பியோடக் கூடாது என்பதற்காக அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தண்டனைக் கைதி ஒருவரை உடல்நலக் குறைவு காரணமாக வார்டன் ஒருவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா… மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!

இருவரும் சிறைக்கு வந்த 2 நாட்களில், லேசான காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற கைதிகளுக்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து சிறை வளாகத்தில் 200 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளட்டப்பட்டது. இதில் சிறை துணைக் கண்காணிப்பாளர், வார்டன்கள் இருவர், 41 தண்டனைக் கைதிகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.