’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

 

’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

தீபாவளிக்கான வெடிச்சத்தங்களும் பலகாரம் சுடும் வாசனையும் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஒளிப்பரான பிக்பாஸ் எப்பிசோட் நேற்றையது. இதை நன்கு உணர்ந்த பிக்கி, கூடுதலாக மசாலா சேர்த்து, ஆட்டம் பாட்டம் என சுவை சேர்த்தார். அவரே எதிர்பாராத ஒன்றும் நிகழ… பிக்கி அண்ணாச்சி செம ஹேப்பி! அப்படி என்ன அது என்பதை கட்டுரையின் இட்டையே பார்ப்போம். (நாங்களும் டீசர் விடுவோம்)

முந்தைய நாள் தொடர்ச்சி

‘என்னைய பேசவே விடமாங்கிறான்’னு அனிதாவிடம் சுசி புகார் சொல்லிட்டு இருந்தார். அனிதா டைரக்‌ஷன் செய்வதுபோல ஆக்‌ஷன் செய்ய, ‘பாலா எங்கிட்ட கோவிச்சிட்டே இருக்கான். நான் கொஞ்ச நேரம் அவன்கிட்ட தனியா பேசிட்டு இருந்தாலே ஷிவானி வந்துடுறா’னு சோகமே வடிவானர் சுசி.

’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

ஆஹா… நம்மளையும் மதிச்சி முதல் பஞ்சாயத்து வந்திருக்கு… இதை விட்டுட கூடாது… எடுடா அந்த பஞ்சாயத்து சொம்பைனு எடுத்துட்டு பாலாவை கூப்பிட்டு பேச்சு வார்த்தை செஞ்சார் அனிதா. ‘சுசி மன்னிப்பு கேட்கிறளவுக்கெல்லாம் நான் நினைக்கவே இல்லையே’னு பாலா லெஃப்ட் ஹேண்டில் ஒதுக்கினார்.

39-ம் நாள்

ரொம்ப உற்சாகமாக இன்றைய நாள் தொடங்க வேண்டும் என பாட்டு போடற தம்பி, பேட்டை சாங்கை ஒலிக்க விட்டார். ‘நீ என்ன வேணா போடு.. நாங்க ஒரே மாதிரிதான் ஆடுவேன்னு ஆடினாங்க.

’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

அங்கேயே பட்டறையைப் போட்டு பாலாவிடம் புலம்பிட்டு இருந்தார் சுசி. அவர் பிடிகொடுக்கல. உடனே, ஷிவானியைப் பிடிச்சி வெச்சி புலம்பினார். அர்ச்சனாவோடு சண்டை போட்டு, உடனே எப்படி சமாதானம் ஆக முடிஞ்சுது.. அர்ச்சனா மதர் செண்டிமெண்டால் பாலாவை வீழ்த்திட்டாங்க’னு ஷிவானிக்கு இசைவான விஷயங்களை முதல்ல சொன்னார் சுசி. எம்மா.. நீ என்னம்மா சைலண்ட் வனிதா மாதிரி இருக்கே… அதுக்கப்பறம் சுசி உருவிய வாள் ரொம்பவே ஆபத்தானது. நீயும் பாலாவும் சுத்திட்டு ரொமான்ஸ் பண்றதை வெளியே லவ் சாங்ஸ் எல்லாம் போட்டு புரோமோ பண்றாங்கன்னு பிக்கியையே போட்டுக்கொடுத்தார். அப்போ, ஷிவானி காட்டிய ரியாக்‌ஷனைப் புரிஞ்சுக்கவே முடியல.

இதே விஷயத்தை சுசி, பாலா, சுரேஷ் பேசினார்கள். அதைக் கேட்டு சுரேஷ், கண்டண்ட் எடுக்கிறதுக்காக ஷிவானியை லவ் பண்றதாக காட்டுவீங்களான்னு கேட்டார். அதைக் கேட்டதும் ஷிவானி ஷாக் ஆனாங்க. ஆனா, பாலாவோடு கூடுதலா நேரம் செலவிட்டாங்க… நெருக்கம் காட்டினாங்க. ஒருவேளை அவங்க நினைச்ச மாதிரிதான் எல்லா போய்ட்டு இருக்குன்னு நிம்மதியாயிட்டாங்க போல.

’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

’அர்ச்சனாவோட நீ சண்டை போட்டதைப் பத்தி சுசி பேசினாங்க’னு ஷிவானி நடந்ததை ஒப்பிவிக்க, உஷாரானார் பாலா. வாழைப்பழத்துல ஊசி ஏத்தற வேலையைப் பார்க்கிறாங்க சுசினு வெளிப்படையாவே சொன்னார்.

அடுத்த வார கேப்டன் தேர்வில் வழக்கம்போல நிஷா தேர்வாகி கூடுதலாக கேபி, ஆஜித்தும் சேர்க்கப்பட்டனர். ஊசி உள்ள தொப்பியை மாட்டிகிட்டு மேலே தொங்குற பலூன்களை உடைக்கணும். அதில் உள்ள காசைச் சேகரிக்கணும். போட்டியைச் சொல்லும்போதே நிஷாவுக்கு வாய்ப்பில்லை எனத் தெரிஞ்சுடுச்சு. ஆனா, ஓரிரு காசு எண்ணிக்கையில்தான் தோற்றார். ஆஜித் அடுத்த வார கேப்டன்.

’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

வழக்கமா, வீட்டில் யாருக்காவது பர்த்டே என்றால், நைட் 12- மணிக்கு கேக் அனுப்புவார். ஷனம் பர்த் டேவை மறந்துட்டார் போல. மதியமா அனுப்பி வெச்சார். கேக் வெட்டல், உறவினர் வாழ்த்தும் வீடியோ என சம்பிரதாயங்கள் முடிந்தன. ஆனாலும், ஷனம் ஹேப்பி.

கிச்சனும் லெமன் பஞ்சாயத்தையும் பிரிக்க முடியாது போல. இன்று லெமன் பஞ்சாயத்தைக் கிளப்பியது சம்யுக்தா. நான் கேட்டேன் தரல.. நிஷா, ரமேஷ்க்குக் கொடுத்தாங்க என அனிதாவைக் கைக்காட்டினார். இன்னொரு பஞ்சாயத்து ஏதோ ஓடியிருக்கும்போல. அனிதா, சம்யுக்தா விஷயத்தை விட்டுவோம். அதைக் கேட்போம் என பிடிவாதமாக நின்றார்.

’இரும்மா ஒரு பொசிசனுக்கு வந்துக்கிறேன்’ என ஆரி ரெடியாகும்முன்பே அனிதா வார்த்தையைக் கொட்டிவிட்டார். உலகமே அனிதாவுக்கு எதிராக நிற்பதுபோன்ற அவரின் எண்ணம், அவருக்கு பெரிய தீங்கையே கொடுக்கும். முந்தைய நாளில் அன்சீன் காட்சிகளில் ரியோவோடு சமாதானம் ஆக அனிதா பேசினார்… பேசினார்… பேசிட்டே இருந்தார். ஆனா, திரும்ப ரியோ பேச ஆரம்பித்த 10 நொடிகளில் குறுக்கிட்டார். இந்த ஆட்டிடியூட் ரொம்ப மோசம். குறுக்கிட்டதோடு நான் இன்னும் பேசி முடிக்கல என்றும் சொல்ல, சரி பேசு என்றால் ஏற்கெனவே பேசியதை வேறு மாடுலேசனில் சொல்லிட்டு இருந்தார். முடியலனு ரியோ புலம்பியது நியாயம்தான்.

’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

நேற்றைய பஞ்சாயத்தில் ஆரி டென்ஷாகிட்டார். பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே என்னை ப்ளேம் பண்றீங்கனு கத்த ஆரம்பிச்சிட்டார். இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தேன் என்பதுபோல அனிதா, அழ ஆரம்பிக்க, சுபம்.

சுசி, பாலாகிட்ட பேசி ஒருவழியாக சமாதானம் ஆகி, கட்டிப்பிடிச்சு, முத்தம் கொடுத்து.. ஃப்ரெண்ட்ஷிப்பை ரினிவல் செய்துகொண்டார். ஷிவானிக்கு இது தெரியுமா பாலா.

’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

‘தீபாவளி நிகழ்ச்சி… சண்டை போடாம இருங்கன்னு பிக்கி சொல்லி அனுப்பியிருக்கிறார் என அர்ச்சனா, ஸ்க்ரோலிங் கமெண்ட் அடித்துவிட்டு சென்றார். அனிதாவின் பொம்மையை ரம்யா கொஞ்சிக்கொண்டிருந்தார்.

அதை அபகரித்த அர்ச்சனாவை, ‘காஞ்சனா மம்மி’ என்று புது பெயர் வைத்தார். அதுக்கெல்லாம் பயப்படுபவரா அர்ச்சனா, பொம்மையைக் கொடுக்காமல் இழுத்தடிக்க, ‘ரெளடி லேடிகிட்டேயிருந்து என்னை பாதுக்காக்கணும்’னு சோம்ஸை அழைக்க, அவர் அர்ச்சனாவிடமிருந்து பொம்மையைப் பிடிங்கி ரம்யா கிட்டே கொடுக்க, மறுபிடியும் பிடிங்க… மறுபடியும் ‘ரெளடி லேடிகிட்டேயிருந்து பாதுகாப்பு கொடுங்குனு ரம்யா கத்த… மொத்தத்தில் ரம்யாவுக்கு பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை. ரம்யா ஆர்மி என்ன செய்கிறது… போர்… போர்… ஆமாம், போர்.

’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

எல்லோரும் புத்தாடையோடு தீபாவளி வாழ்த்துகள் சொல்ல, பிக்கியும் திரும்ப வாழ்த்துகளைப் பரிமாறினார். கூடவே முறுக்கு, ரவா லட்டு நல்லா இருந்துச்சுனு சொன்னதும் எல்லோரும் செம ஹேப்பி.

ரவுண்ட் வீல் சுத்த அதில் வரும் எண்களுக்கு ஏற்ற பரிசுகள் கிடைக்கும் விளையாட்டை ஆரம்பித்தார் பிக்கி. அர்ச்சனாவுக்கு பலகாரம், ரம்யாவுக்கு மத்தாப்பு, சோம்க்கு டிஜே மியூஸிக் என வந்துகொண்டிருக்க, சிலருக்கு தீபாவளி வாழ்த்துகள்ன்னு பல்பு வாங்கிட்டு இருந்தாங்க. ஷனம் சுற்றிவிட்டபோது அவருக்கு கிடைத்த பரிசு… எலுமிச்சை பழங்கள்’ பிக்கி வர வர ஓவர் குசும்பு அதிகமாயிட்டு இருக்கு. ஆனாலும் நல்லாத்தான் இருக்கு.

பரிசுகள் வர, ஆவலோடு போய் வாங்கிய ரியோ, ஊறுகாய், தட்டை என சைடிஸ் வகையாக இருக்க, பொங்கி வந்த ஃபீலிங்கைக் கட்டுப்படுத்த முடியாம தவித்தார். தோள் கொடுத்தார் சோம்ஸ்.

’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

சோம்ஸ்க்கு பரிசா வந்த டிஜெ மியூஸிக்கை ஒலிக்க விட்டார் பிக்கி. வழக்கமாக லேசாக மூவ்மெண்ட் பண்ணிவிட்டு ஒதுங்கி கொள்வார் ரம்யா. இன்னிக்கு என்ன ஆச்சோ.. களத்தில் இறங்கி செம பர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டு இருந்தார்.

அப்போதான் பிக்கியின் திட்டங்களில் இல்லாததாக மழை பெய்ய ஆரம்பித்தது. ரம்யா, அர்ச்சனா, ஷிவானி உள்ளிட்டோர் மழையில் ஆட, சுசித்ரா பாடல்களைப் பாடினார். சென்ற சீசனில் இருந்த சாண்டி அண்ட் குரூப் இந்த சூழலில் இருந்திருந்தால் ரகளை பண்ணியிருப்பார்கள். இந்த சீசனிலோ பொன் வைக்கிற இடத்தில் பூவைத்தான் வைக்கிறார்கள். சில நேரம் பூ நார்தான் இருக்கு.

இடையில் விளம்பரதாரர் டாஸ்க் ஒன்றும் நடந்தது. விற்பனையாளர் vs வாங்குபவர்களாக நடித்துக்காட்ட்டி சோம்ஸ் டீம் வென்றது. அதுக்கான பரிசுகளும் கிடைத்தன. இந்த வாரம் முழுக்க, பரிசுகளால் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் நனைந்து வருகிறார்.

’பிக் பாஸ் வீட்டில் ரம்யாவுக்குப் பாதுகாப்பு இல்லையா?’ 40-ம் நாள்

இதை விடவும் தீபாவளி எப்பிசோட்டுக்கு கண்டண்ட் தேத்த முடியாது… இதுக்கே நாக்கு தள்ளிப்போச்சுன்னு பிக்கியின் செல்ல எடிட்டர் கதறுவது கேட்டது. அதை மறைப்பதற்காக பிக்கி தனது குரலை கணைத்துக்கொண்டே பின்கதை சுருக்கதைச் சொல்ல ஆரம்பித்தார்.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.