40 லிட்டர் ரத்தம் வெளியேறி பலியான யானை… மனிதர்களின் காட்டு மிராண்டித்தனம்!

 

40 லிட்டர் ரத்தம் வெளியேறி பலியான யானை… மனிதர்களின் காட்டு மிராண்டித்தனம்!

மனிதர்களின் காட்டுமிராண்டித்தனமானத்தால், அராஜக செயலினால் உடலில் இருந்து 40 லிட்டர் ரத்தம் வெளியேறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது யானை.

நீலகிரி மாவட்டத்தில் மசினக்குடி பகுதியில் அடிக்க சுற்றிக்கொண்டிருக்கும் காட்டு யானையை வனத்துறை அவ்வப்போது பழங்களை கொடுத்து காட்டுக்குள் அனுப்பி வைத்து வந்துள்ளனர்.

40 லிட்டர் ரத்தம் வெளியேறி பலியான யானை… மனிதர்களின் காட்டு மிராண்டித்தனம்!

முதுகில் ஏற்பட்ட காயத்தினால் இந்த யானை கடந்த மூன்று மாதங்களாக அவதிப்பட்டு வந்தது தெரியவந்ததும் கடந்த மாதம் மயக்க ஊசிசெலுத்தி அந்த யானையை பிடித்து சிகிச்சை அளித்தனர் வனத்துறையினர். பின்னர் காட்டுக்குள் விட்டுவிட்டனர்.

அதன்பின்னர்தான் அராஜக மனிதர்களால் அந்த கொடூரம் நடந்திருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையிலேயே நின்றுகொண்டிருந்த அந்த யானையை வழக்கம் போலவே பழங்கள் கொடுத்து திசை திருப்பி காட்டுக்குள் அனுப்ப முயற்சித்தினர். அப்போது காதில் இருந்து ரத்தம் வழிந்தது கண்டதும் திடுக்கிட்டனர்.

உடனே மாத்திரைகளை பழத்திற்குள் வைத்து கொடுத்ததும் சிறிது நேரத்திற்குள் ரத்தம் கொட்டுவது குறைந்தது. இதையடுத்து சிகிச்சை அளிக்க கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே அந்த யானை உயிரிழந்துவிட்டது.

பின்னர் பிரேத பரிசோதனையில்தான் யானைக்கு நேர்ந்த கொடூரம் தெரியவந்தது. யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்துவிடுவதால் அதை விரட்ட அராஜக கும்பல் பட்டாசுகளை கொளுத்தி யானை மேல் வீசுவதும், பெட்ரோல் குண்டுகளை வீசி எறிவதும், ஆசிட்டைஊற்றுவதுமான கொடுமைகளை செய்து வந்துள்ளனர்.

40 லிட்டர் ரத்தம் வெளியேறி பலியான யானை… மனிதர்களின் காட்டு மிராண்டித்தனம்!

இதனால் காதில் காயம் ஏற்பட்டு அது வழியாக 40 லிட்டர் ரத்தம் வெளியேறி இருக்கிறது.

முதுகில் இருந்த காயத்தின் மேல் ஆசிட், பெட்ரோல் போன்றவை சேர்ந்து மேலும்காயத்தை அதிகமாக்கி, ஆழமான காயமாக மாறி இருக்கிறது. இதனால் யானையின் இரண்டு விலா எலும்புகளும் உடைந்துவிட்டன. காது காயம் வழியாக 40 லிட்டர் ரத்தம் வெளியேறி மிகவும் சோர்வடைந்து போய்தான் நடக்க முடியாமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்திருக்கிறது யானை.

40 லிட்டர் ரத்தம் வெளியேறி பலியான யானை… மனிதர்களின் காட்டு மிராண்டித்தனம்!

யானை மீது இந்த அளவுக்கு கொடூர தாக்குதலை நடத்தியவர்களை பிடித்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

யானையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் பலரும், மனிதர்களின் இத்தகையை காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காதா நீதிமன்றம்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.