குறையும் பாதிப்பு… அதிகரிக்கும் மரணங்கள்: மத்திய அரசின் பகீர் ரிப்போர்ட்!

குறையும் பாதிப்பு… அதிகரிக்கும் மரணங்கள்: மத்திய அரசின் பகீர் ரிப்போர்ட்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஒரு சில நாட்களாக பாதிப்புகள் குறைந்து வருவது சற்றே ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் மரணங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறையும் பாதிப்பு… அதிகரிக்கும் மரணங்கள்: மத்திய அரசின் பகீர் ரிப்போர்ட்!

தினமும் ஏற்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,11,170 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் 3,62,437 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் 4,077 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

குறையும் பாதிப்பு… அதிகரிக்கும் மரணங்கள்: மத்திய அரசின் பகீர் ரிப்போர்ட்!

மேலும், மொத்த பாதிப்புகள் எண்ணிக்கை – 2,46,84,077, மொத்த உயிரிழப்புகள் – 2,70,284, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை – 2,07,95,335 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 4 லட்சத்துக்கு மேல் பதிவாகி வந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு தற்போது 3.11 லட்சமாக குறைந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகள் மீண்டும் 4 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.