4030 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட விவோ ஒய்91ஐ பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

4030 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட விவோ ஒய்91ஐ பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது தான் விவோ ஒய்91 ஸ்மார்ட்போன் ஆகும். இது ஃபியூஷன் பிளாக், சன்செட் ரெட் மற்றும் ஓசன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் 16 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.7990 என்றும், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.8490 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்பிளே உள்ளது.

விவோ ஒய்91ஐ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.22 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட், ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 8 எம்.பி செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, 4030 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.