சென்னை காவல் துறையை சேர்ந்த 401 பேருக்கு கொரோனா!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. கொரோனா தடுப்புப் பணியில் பெறும் பங்காற்றி வரும் காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் மட்டுமே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஆயுதப்படை,தீயணைப்பு, ரயில்வே ஊர்காவல் படை என 401 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.

இந்நிலையில் மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை சென்னை காவல் துறையை சேர்ந்த 401 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் டிஎஸ்பிக்கள் 3 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

`மனைவி சாப்பாடு கொடுக்கல; அதனால் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்!;- சிக்கிய கணவர் வாக்குமூலம்

மனைவி சாப்பாடு கொடுக்காததால் அவளை சிக்க வைக்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என்று கைதான வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் பசுமை வழிச்சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில்...

140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் கொரோனா பரவாதது எப்படி? – ராமதாஸ் கேள்வி

இந்தியாவை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது எப்படி என்று டாக்டர் ராமதாஸ் வியப்பு தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா...

சென்னையில் 52 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர்; மாநகராட்சியின் பாதிப்பு விவரம் வெளியீடு!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு...

செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 7,486 ஆக உயர்வு : விழுப்புரத்தில் 1500 ஐ நெருங்கியது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக...
Open

ttn

Close