4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் மூன்று பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் மூன்று பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் அறிமுகம்

மூன்று பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: மூன்று பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் நெதர்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புள்ளதாக விளங்கி வருகின்றன. அந்த வகையில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் இருக்கின்றன. இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் பே, பிக்ஸ்பி விஷன், பிக்ஸ்பி வாய்ஸ், பிக்ஸ்பி ஹோம் மற்றும் பிக்ஸ்பி ரிமைண்டர் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவுக்கு இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் போது ரூ.28,000 விலையில் விற்கப்படும் என்று கருதப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் பிளாக், வொயிட், புளு மற்றும் கோரல் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனுடன் சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஆகும். ரெட்மி நோட் 7 மாடலுக்கு போட்டியாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றபடி சாம்சங் கேலக்ஸி ஏ50 சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்பிளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9610 பிராசஸர், 4 ஜிபி ரேம்/64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம்/128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 25 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி டெப்த் சென்சார், 8 எம்.பி அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, 25 எம்.பி செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.