4,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட ஹானர் 8C பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

4,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட ஹானர் 8C பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் ‘ஹானர் 8C’ பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ஹூவாய் நிறுவனத்தின் ‘ஹானர் 8C பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹூவாய் ஹானர் நிறுவனம் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது ஹானர் 8C ஸ்மார்ட்போன் ஆகும். ஹானர் 7C ஸ்மார்ட்போனின் அப்டேட்டட் வெர்ஷனாக புதிய ஹானர் 8C அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களாக 6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4000 எம்.ஏ.எச் பேட்டரி, ஏ.ஐ பியூட்டிஃபை ஆகியவை உள்ளன.

ஹானர் 8C சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே

ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம் பிராசஸர்

– 4 ஜிபி ரேம்

– 32 ஜிபி / 64 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2

– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8

– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4

– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்

விரல்ரேகை சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் அரோரா புளு, மிட்நைட் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.11,999 மற்றும் 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 8C ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஹானர் இந்தியா வலைதளங்களில் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படவிருக்கிறது.