“திருவண்ணாமலையில் கூடுதலாக 400 ஆக்சிஜன் படுக்கைகள் அமைப்பு”- ஆட்சியர் சந்தீப் நந்தூரி!

 

“திருவண்ணாமலையில் கூடுதலாக 400 ஆக்சிஜன் படுக்கைகள் அமைப்பு”- ஆட்சியர் சந்தீப் நந்தூரி!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 400 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் புதிதாக அமைக்கப்படும் புதிய படுக்கைகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சாலைகளில் அவசியமின்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை எச்சரித்த ஆட்சியர், விதியை மீறி 12 மணிக்கு மேல் செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முக கவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு நாள்தோறும் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாக கூறினார்.

“திருவண்ணாமலையில் கூடுதலாக 400 ஆக்சிஜன் படுக்கைகள் அமைப்பு”- ஆட்சியர் சந்தீப் நந்தூரி!

மேலும், மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் பழைய அரசு மருத்துவமனை, ஆயுஷ் மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தீவிரமாக நடந்த வருவதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை பழுதான நகராட்சி எரிவாயு தகன மேடையை ஆய்வுசெய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அடுத்த 2 முதல் 3 நாட்களில் பழுது நீக்கப்படும் என தெரிவித்தார்.