பாடத்திட்டங்கள் 40% குறைப்பு : அமைச்சர் செங்கோட்டையன்

 

பாடத்திட்டங்கள் 40% குறைப்பு : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

பாடத்திட்டங்கள் 40% குறைப்பு : அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் மாணவர்களுக்கான பாடதிட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குழு அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

பாடத்திட்டங்கள் 40% குறைப்பு : அமைச்சர் செங்கோட்டையன்
நீட்

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டி தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர் கொரோனா முடிவுக்கு பிறகு விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றார். அத்துடன் சனிக்கிழமைகளில் கல்வி தொலைக்காட்சியில் 6 மணிநேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும் என்றும் கூறினார்.