’40 மில்லியன் குழந்தைகள் கொரோனாவால் ப்ரி ஸ்கூல் கல்வியை இழக்கின்றனர்’ யுனிசெஃப்

’40 மில்லியன் குழந்தைகள் கொரோனாவால் ப்ரி ஸ்கூல் கல்வியை இழக்கின்றனர்’ யுனிசெஃப்

கொரோனா நோய்த் தொற்றலின் பெரும் பாதிப்பு குழந்தைகளில் கல்வி பாதிப்பு அடைவதுதான். அதைத்தான் யுனிசெஃப் தெளிவாகக் கூறியுள்ளது.

’40 மில்லியன் குழந்தைகள் கொரோனாவால் ப்ரி ஸ்கூல் கல்வியை இழக்கின்றனர்’ யுனிசெஃப்

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கியது. அது மெல்ல உலகநாடுகளுக்கும் பரவியது. உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளே கொரோனா பரவலைத் தடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. இன்றைய நிலவரப் படி கொரொனாவின் மொத்தப் பாதிப்பு 1,51,73, 022 பேர். இதில் 91,71,287 பேர் குணமாகியுள்ளனர். 6,21,680 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

’40 மில்லியன் குழந்தைகள் கொரோனாவால் ப்ரி ஸ்கூல் கல்வியை இழக்கின்றனர்’ யுனிசெஃப்

கொரொனா நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதால் பல நாடுகளில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்ற முடிவே எடுக்க முடியாத சூழல். இந்த நிலையில் குழந்தைகள் நலனை முன்னிருத்தி இயங்கும் யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்ரியட்டா ஃபோர் கூறுகையில், கொரோனா என்பது உலகளவில் குழந்தைப் பாதுகாப்பில் பெரிய நெருக்கடியை உருவாக்கி விட்டது. 40 மில்லியன் குழந்தைகள் ப்ரி ஸ்கூல் கல்வியைப் பெற முடியாமல் கொரோனா தடுத்துவிட்டது.

மேலும் கூறுகையில், ‘ப்ரி ஸ்கூல் கல்வி என்பது ஒரு குழந்தையின் கல்வியின் அடித்தளம் போன்றது. அதை குழந்தைகள் இழக்கும் சூழல் உருவாகிவிட்டது. பல பெற்றோர்கள் கொரோனாவுக்கு அச்சப்பட்டு பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகிறார்கள்’ என்று கூறுகிறார்.