“சாலையில் விழுந்த 40 அடி உயர மரம்” …போக்குவரத்து பாதிப்பு!

“சாலையில் விழுந்த 40 அடி உயர மரம்” …போக்குவரத்து பாதிப்பு!

சென்னையில் பலத்த மழை காரணமாக 40 அடி உயர மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாற உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் அதிக கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“சாலையில் விழுந்த 40 அடி உயர மரம்” …போக்குவரத்து பாதிப்பு!

இந்நிலையில் சென்னை அசோக் நகரில் கனமழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 40 அடி உயர மரத்தை உடனே மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

“சாலையில் விழுந்த 40 அடி உயர மரம்” …போக்குவரத்து பாதிப்பு!

இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறுகிறது. நேற்று நள்ளிரவு 11.30 மணி நிலவரப்படி 12 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.