இந்தியாவில் 40 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்..!

 

இந்தியாவில் 40 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே சமயம் கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 30,093 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,11,74,322 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 374 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 40 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்..!

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் 21 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் ஆறு வயதிற்கு மேற்பட்ட 28 ஆயிரத்து 975 பேரிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 67% பேருக்கு அதாவது சுமார் 80 கோடி பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் 40 கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 40 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்..!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் இறுதியில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மூன்றாவது அலை மற்ற முதல் இரண்டு அலைகளை போல இல்லாமல் தாக்கம் சற்று தணிந்தே காணப்படும் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.