ஒரே கல்..40 டன் எடை..18 கைகள்..சென்னையில் இருந்து ஆந்திரா சென்ற பிரம்மாண்ட காளி!

ஒரே கல்..40 டன் எடை..18 கைகள்..சென்னையில் இருந்து ஆந்திரா சென்ற பிரம்மாண்ட காளி!

ஒரே கல்லில் 21 அடி உயரத்தில் 18 கைகளுடன் வடிக்கப்பட்டிருக்கிறது காளி சிலை. 100 சிற்பக்கலைஞர்கள் முயற்சியில் உருவான 40 டன் எடை கொண்ட இந்த காளி சிலை 5 கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு சென்றது.

ஒரே கல்..40 டன் எடை..18 கைகள்..சென்னையில் இருந்து ஆந்திரா சென்ற பிரம்மாண்ட காளி!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் திரிபுரந்தாக்கத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கபாலி தப்போ சித்தா ஆசிரமத்தில் இந்த காளி சிலை வரும் 1ம் தேதி அன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. லட்சகணக்கான பக்தர்கள் இந்த பூஜையில் பங்கேற்கிறார்கள்.

செங்கல்பட்டில் இயங்கி வரும் ஸ்வர்ணம் சிற்பக்கலைகூடம் இந்த சிலையை வடித்திருக்கிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சிற்பி முத்தையா சபாபதிதான் இந்த சிற்பக்கூடத்தை நடத்தி வருகிறார்.

ஒரே கல்..40 டன் எடை..18 கைகள்..சென்னையில் இருந்து ஆந்திரா சென்ற பிரம்மாண்ட காளி!

21 அடியில் ஒரே கல்லில் காளி சிலை வேண்டும் என்றதும், அந்த கல்லுக்காக பெரும் தேடுதல் படலமே நடத்தி இருக்கிறார் சிற்பி முத்தையா சபாபதி. கல் கிடைத்ததும், 100க்கும் மேற்பட்டோரை துணைக்கு வைத்துக்கொண்டு சிலை வடித்திருக்கிறார்.

ஒரே கல்..40 டன் எடை..18 கைகள்..சென்னையில் இருந்து ஆந்திரா சென்ற பிரம்மாண்ட காளி!

சிலையை ஆந்திராவுக்கு எடுத்துச்செல்லும் முன்பு, ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிடப்பட்டு பூஜை செய்யப்பட்டுள்ளது.