’40 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா மாபெரும் சாதனையை படைத்துள்ளான்’ : இயக்குநர் பாரதிராஜா

 

’40 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா மாபெரும் சாதனையை படைத்துள்ளான்’ : இயக்குநர் பாரதிராஜா

கடந்த செப்டம்பர் 6-ம்தேதி முதல் பிரசாத் ஸ்டூடியோ ஊழியர்கள் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் ரெகார்டிங் தியேட்டரில் 20 கம்ப்யூட்டர் டேபிளை  வைத்துக் கொண்டு இடையூறு செய்து  வந்தனர்.

கடந்த செப்டம்பர் 6-ம்தேதி முதல் பிரசாத் ஸ்டூடியோ ஊழியர்கள் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் ரெகார்டிங் தியேட்டரில் 20 கம்ப்யூட்டர் டேபிளை  வைத்துக் கொண்டு இடையூறு செய்து  வந்தனர். இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. இந்த விவகாரத்தில்  இயக்குநர்  பாரதிராஜா  உள்பட பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகக் கைகொடுத்தனர்.

Prasath studio

இந்நிலையில் இன்று இளையராஜாவுக்கு ஆதரவாகச் சமரச பேச்சுவார்த்தை நடத்த பிரசாத் ஸ்டூடியோவுக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், பாக்யராஜ், ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அப்போது பாரதிராஜா, சீமான் இருவரையும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் உள்ளே அனுமதிக்காததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  

ttn

இதை தொடர்ந்து இவர்கள் 5 பேரும் சுமுக பேச்சுவார்த்தைக்கு  உள்ளே  அனுமதிக்கப்பட்டனர்.

bharathi raja

பேச்சு வார்த்தை நடத்தி முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா, ” இளையராஜா 45 வருடங்களாக மாபெரும் சாதனையை பிரசாத் ஸ்டுடியோவில் செய்திருக்கிறான், ஒரு இடத்தில் 10 வருடம் இருந்துவிட்டாலே அந்த இடம் சென்டிமென்டாக இருந்துவிடும். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதுவரை இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் பணிபுரிய அனுமதியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். சில பிரச்னைகள் காரணமாக பாரதிராஜாவும் இளையராஜாவும் பேசிக்கொள்ளாமல் இருந்த நிலையில், பிரசாத் ஸ்டுடியோ பிரச்னையின் காரணமாக மீண்டும் இருவரும் ஒன்று கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.