40 லட்சம் இருக்கிறதா? கார் என்ன, கம்ப்யூட்டரே வாங்கலாம் !

 

40 லட்சம் இருக்கிறதா? கார் என்ன, கம்ப்யூட்டரே வாங்கலாம் !

ஒரு பென்ஸ் காரின் விலை கொண்ட கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தி கணினி பயன்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது ஆப்பிள் நிறுவனம். 
அனைத்து அம்சங்களுடன் கூடிய புதிய கம்ப்யூட்டர் ஒன்றை ஆப்பி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதனுடைய விலை அதிகம் இல்லை ஜென்டில்மேன் வெறும் 40 லட்சம் ரூபாய்தான். இதற்கு நான் காரே வாங்கி விடுவேன் என்று புலம்புபவர்களுக்கு இந்த கம்ப்யூட்டரில் உள்ள அதிநவீன வசதிகளை விளக்கத்தோடு கூறியுள்ளது ஆப்பிள் நிறுவனம். ஆனாலும் இது நிச்சயமாக பணக்காரர்கள் மட்டும்தான் வாங்க முடியும் என பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

imac

ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேக் ப்ரோ கம்ப்யூட்டர் விலை ரூ. 37.21 லட்சம். இந்த மேக் ப்ரோ அமெரிக்காவில் 52,599 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சாமானிய மனிதர்கள் வாங்க முடியாவிட்டாலும் சினிமாவில் பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் படத்தொகுப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், வரைகலை நிபுணர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

pro

ஆப்பிள் மேக் ப்ரோ சிறப்பம்சங்கள்  என்னவென்றால், 2.5GHz Intel Xeon W processor with 28 cores, 56 threads, Turbo Boost 4.4GHz, 1.5TB of 2933MHz RAM, 4TB of SSD. 32GB RAM, octa-core Intel Xeon CPU, Radeon Pro 580X graphics, 256GB SSD Hard disk ஆகியன உள்ளது. மேலும் கூடுதலாக Magic Mouse, Magic Keyboard, Lightning Cable  ஆகியவற்றுடன் வருகிறது. ஆனால் 6K Resolution கொண்ட Prof XDR திரையைத் தனியாகத் தான் வாங்க வேண்டும்.