40 லட்சத்தைக் கடந்த இந்தியா… பிரேசில் எண்ணிக்கையை நெருங்குகிறது

 

40 லட்சத்தைக் கடந்த இந்தியா… பிரேசில் எண்ணிக்கையை நெருங்குகிறது

கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்பதே இன்றைய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

செப்டம்பர் 5-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.  

40 லட்சத்தைக் கடந்த இந்தியா… பிரேசில் எண்ணிக்கையை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 67 லட்சத்து  95 ஆயிரத்து 847 பேர்.   

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 89 லட்சத்து 07 ஆயிரத்து 692 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 78 ஆயிரத்து 963 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.

  

40 லட்சத்தைக் கடந்த இந்தியா… பிரேசில் எண்ணிக்கையை நெருங்குகிறது

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 70,09,192 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 63,89,057 பேரும், பிரேசில் நாட்டில்  40.91,801 பேரும் இந்தியாவில் 40,23,179 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

40 லட்சத்தைக் கடந்த இந்தியா… பிரேசில் எண்ணிக்கையை நெருங்குகிறது

இதன்மூலம் இந்தியா 40 லட்சத்தைக் கடந்த நாடுகளின் பட்டியலில் வந்துவிட்டது. பிரேசிலுக்கும் இந்தியாவுக்கு சுமார் 70 ஆயிரம் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. ஆனால், பிரேசிலை விட நாள்தோறும் இருமடங்கில் இந்தியாவில் புதிய நோயாளிகள் அதிகரிக்கின்றனர். இதனால் இன்னும் ஓரிரு நாளில் பிரேசிலை இந்தியா முந்திச் செல்லக்கூடும்.

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

அமெரிக்காவில் 52,853 பேரும், பிரேசிலில் 45,651 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 87,115 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.