40 நாட்கள் மது விரதம் முடிவுக்கு வந்தது – கர்நாடகாவில் மதுக் கடைகள் முன்பு குவிந்த குடிமகன்கள்

 

40 நாட்கள் மது விரதம் முடிவுக்கு வந்தது  – கர்நாடகாவில் மதுக் கடைகள் முன்பு குவிந்த குடிமகன்கள்

கர்நாடகாவில் மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அங்கு குடிமகன்கள் குவிந்தனர்.

பெங்களூரு: கர்நாடகாவில் மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அங்கு குடிமகன்கள் குவிந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கர்நாடகாவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் மட்டுமே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபான விற்பனை கர்நாடகாவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 40 நாட்களாக மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் மது விரதம் இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருந்தனர். அதனால் கர்நாடகாவில் மதுக் கடைகள் முன்பு இன்று குடிமகன்கள் குவிந்தனர். ஆனால் வரிசையில் நின்று ஒவ்வொருவராக மது பாட்டில்களை பெற்று சென்றனர்.

வில்சன் கார்டனின் ஹோசூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மதுபான கடைக்கு முன்னால் மக்கள் வரிசையில் நிற்பதை மக்கள் கண்டனர். அதேபோல ஜலஹள்ளி வட்டம் அருகே ஒரு மதுபான கடைக்கு வெளியே மக்கள் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றார்கள். ஹனுமந்தநகர் பெங்களூருவில் 50 அடி சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் இருந்து மக்கள் மதுபானம் வாங்குவதை பார்க்க முடிந்தது.