40 ஆயிரம் ரூபாய் செல்போன் வேண்டாம் ! 35 ஆயிரம் ரூபாய் வாட்ச் போதும் !

40 ஆயிரம் ரூபாய் செல்போன் வேண்டாம் ! 35 ஆயிரம் ரூபாய் வாட்ச் போதும் !

கடந்த 20 ஆண்டுகளில் அபார தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்போன் வருகையால் பலர் வாட்ச் கட்டுவதையை நிறுத்திவிட்டனர். இதனால் கைக்கடிகாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்தன. தற்போது கைக்கடிக்காரத்தையே செல்போன்போல் பேசும் தொழில்நுட்பத்தை கொண்டு வருகிறது சாம்சங் நிறுவனம். இதன் மூலம் நாம் மற்றவர்களிடம் பேசுவதற்கு செல்போன் பயன்படுத்த தேவை இல்லை. 

samsung

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் “சாம்சங் கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி” என்ற வாட்ச் அறிமுகப்படுத்தி உள்ளது. சில்வர் மற்றும் கருப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரம் மனிதர்களின் 39 செயல்பாடுகளை தனித்துவமாக கணிக்கும் வகையில் சென்சார்களை கொண்டுள்ளது. மேலும் இதில் நடைபயிற்சி, நீச்சல் போன்றவற்றின் செயல்பாடுகளை கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

watch

இந்த கைக்கடிகாரம் பயன்படுத்தும்போது செல்போன் இருக்க  வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் மொபைல் போன் இல்லாமலும் மற்றவர்களுக்கு கால் செய்யும் வசதி, சமூக வலைதளங்களை இயக்கும் வசதி ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் இதன் விலை ரூபாய் 35,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து செல்போன் வாங்குவதற்கு பதில் இனி இதை வாங்கி பயன் அடையலாமே?