Home இந்தியா 40 பெண்கள்.. 92 செக்ஸ் வீடியோக்கள்.. உலுக்கியெடுக்கும் அதிர்ச்சி சம்பவம்!

40 பெண்கள்.. 92 செக்ஸ் வீடியோக்கள்.. உலுக்கியெடுக்கும் அதிர்ச்சி சம்பவம்!

பொள்ளாச்சியில் பல கல்லூரி மாணவிகளையும், இளம்பெண்களையும் காதலிப்பதாக கூறி, கற்பழித்து, வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் வசூலித்து வந்த கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் நாடு முழுவதுமே பெரிய அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கடந்த வாரம் இதே போல சேலத்தில் ஒரு இளைஞர், கல்லூரி மாணவிகளை சமூக வலைத்தளங்களின் மூலமாக வலைவிரித்து, காதல் நாடகமாடி கற்பழித்து மிரட்டியுள்ளார்.

பொள்ளாச்சியில் பல கல்லூரி மாணவிகளையும், இளம்பெண்களையும் காதலிப்பதாக கூறி, கற்பழித்து, வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் வசூலித்து வந்த கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் நாடு முழுவதுமே பெரிய அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கடந்த வாரம் இதே போல சேலத்தில் ஒரு இளைஞர், கல்லூரி மாணவிகளை சமூக வலைத்தளங்களின் மூலமாக வலைவிரித்து, காதல் நாடகமாடி கற்பழித்து மிரட்டியுள்ளார். பின்னர் அதை வீடியோக்களாக எடுத்து வைத்து மிரட்டி பணம் வாங்கியிருக்கிறார். தொடர்ந்து புது புது காதலிகளுடன் உல்லாசம் அனுபவித்து, மிரட்டி பணம் வாங்கி வந்த அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்,  அதே சேலத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவரும் இதே போல தனது ஆட்டோவில் சவாரி செய்த பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி, மிரட்டி பணம் வசூலித்தது அதிர்ச்சியைக் கிளப்பியது.

video

ஒரு பக்கம் சபல ஆண்கள் இப்படி நாட்டில் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்றால், பெண்களும் இது போல் இப்போது கிளம்பியுள்ளது போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்திய பிரதேசம், இந்தூரை சேர்ந்தவர் ஹர்பஜன் சிங். பெரிய பதவிகளில் வீற்றிருக்கும் இவரிடம் பணத்திற்கும், அதிகாரத்திற்கும் பஞ்சம் கிடையாது. அழகான, அன்பான குடும்பம் என்று வாழ்ந்து வந்த ஹர்பஜன் சிங், சபலத்தில் இளம்பெண்கள் விரித்த வலையில் சிக்கியிருக்கிறார். இவர் கடந்த வாரம் இந்தூரில், பலசியா காவல் நிலையத்தில், ‘தன்னுடன் இரண்டு பெண்கள் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், அதை வீடியோவாக பதிவு செய்துக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பலமுறை அவர்களுக்கு பணம் கொடுத்து விட்டதாகவும்’ கண்ணீர் மல்க புகார் கொடுத்திருக்கிறார்.
ஆபாச வீடியோவை வைத்துக் கொண்டு பெண்கள் பணம் பறிக்கும் விநோத வழக்கை விசாரித்து வந்த போலீசார், அந்த பெண்களை பணம் வாங்கிச் செல்ல, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்லி, பொறி வைத்து பிடித்தனர். விசாரணையில் மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. மூன்று பெண்களை கைது செய்த போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், தற்போது அவர்களின் தோழிகளாக சுமார் 40 பெண்கள் வரை இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.
பல கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகள், பெரிய பெரிய அரசு அதிகாரிகள்,முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் என அத்தனை பேரும் அதிகாரத்திலும், பண பலத்திலும் சக்தி வாய்ந்தவர்கள்.

arrested

அந்த பெண்களிடம்  இருந்து  92 செக்ஸ் வீடியோக்களையும் கைப்பற்றியுள்ளனர் போலீசார்.  இப்படி, அந்தரங்க வீடியோக்களைக் காட்டி மிரட்டி, இவர்களிடம் சுமார் ரூ.15 கோடிக்கும் அதிகமாக அந்த பெண்கள் சம்பாதித்துள்ளனர். இன்னும் பலரும் சமூகத்தில் பெயர் கெடும் என்பதாலும், குடும்ப வாழ்க்கை சீரழியும் என்பதாலும் புகார் அளிக்க முன்வரவில்லை. அதனால், 15 கோடிக்கும் அதிகாமவே இவர்கள் மிரட்டி பணம் வாங்கியிருக்கிறார்கள் என போலீசார் தெரிவித்தனர். இந்த பெண்கள், லேப்-டாப், சொகுசு கார்கள் என்று ஹை டெக்காக வலம் வந்திருக்கிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. பா.ஜ.க. அரசின் மிஷன் சக்தி தோல்வி.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மிஷன் சக்தி திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு… பா.ஜ.க அரசை சாடிய ராகுல் காந்தி

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு என்று பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை.. இது வெளிப்படையான போட்டி.. தாக்கரேவுக்கு குட்டு வைத்த யோகி ஆதித்யநாத்

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை, இது வெளிப்படையான போட்டி என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார். உத்தர...

பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. பேமஸ்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தாக்கு

பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பிரபலம் (பேமஸ்) என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா...
Do NOT follow this link or you will be banned from the site!