Home இந்தியா 40 நாட்கள் மது விரதம் முடிவுக்கு வந்தது - கர்நாடகாவில் மதுக் கடைகள் முன்பு குவிந்த குடிமகன்கள்

40 நாட்கள் மது விரதம் முடிவுக்கு வந்தது – கர்நாடகாவில் மதுக் கடைகள் முன்பு குவிந்த குடிமகன்கள்

கர்நாடகாவில் மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அங்கு குடிமகன்கள் குவிந்தனர்.

40 நாட்கள் மது விரதம் முடிவுக்கு வந்தது  - கர்நாடகாவில் மதுக் கடைகள் முன்பு குவிந்த குடிமகன்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அங்கு குடிமகன்கள் குவிந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கர்நாடகாவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் மட்டுமே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபான விற்பனை கர்நாடகாவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 40 நாட்களாக மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் மது விரதம் இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருந்தனர். அதனால் கர்நாடகாவில் மதுக் கடைகள் முன்பு இன்று குடிமகன்கள் குவிந்தனர். ஆனால் வரிசையில் நின்று ஒவ்வொருவராக மது பாட்டில்களை பெற்று சென்றனர்.

வில்சன் கார்டனின் ஹோசூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மதுபான கடைக்கு முன்னால் மக்கள் வரிசையில் நிற்பதை மக்கள் கண்டனர். அதேபோல ஜலஹள்ளி வட்டம் அருகே ஒரு மதுபான கடைக்கு வெளியே மக்கள் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றார்கள். ஹனுமந்தநகர் பெங்களூருவில் 50 அடி சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் இருந்து மக்கள் மதுபானம் வாங்குவதை பார்க்க முடிந்தது.

40 நாட்கள் மது விரதம் முடிவுக்கு வந்தது  - கர்நாடகாவில் மதுக் கடைகள் முன்பு குவிந்த குடிமகன்கள்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“இது நியாயமல்ல; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” – முதல்வர் ஸ்டாலினை விளாசிய அன்புமணி!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடார்பாக...

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

முதல்வர் அறிவிக்கும் போது பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,...

“தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையை உடனே தீருங்கள்” – அமைச்சர் கேஎன் நேருவுக்கு வைகோ அவசர கடிதம்!

தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேருவுக்கு மதிமுக பொதுச்...

இந்தாண்டு தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு...
- Advertisment -
TopTamilNews