40 ஆண்டுகளாக காஷ்மீரை கொள்ளையடித்த தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்- ஜே.பி. நட்டா தகவல்

40 ஆண்டுகளாக காஷ்மீரை கொள்ளையடித்த தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என காங்கிரஸ், பி.டி.எப். மற்றும் என்.சி. கட்சி தலைவர்களை பா.ஜ.க.வின் செயல்தலைவர் ஜே.பி. நட்டா தாக்கினார்.

ஜார்க்கண்டில் வரும் 30ம் தேதி  முதல் 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா, அம்மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: 

மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி

106 இந்திய சட்டங்கள் காஷ்மீருக்கு  (சிறப்பு அந்தஸ்து இருந்தபோது) பொருந்தாது. ஊழல் தடுப்பு சட்டம் இல்லாததால் மூன்றே மூன்று குடும்பங்கள் காஷ்மீரை கொள்ளையடித்தன. மேலும் பிரிவினைவாதத்தை தூண்டி விட்டன. தணிக்கை அமைப்பும் கிடையாது. தற்போது ஜே&கே வங்கியின் விசாரணை தொடங்கியுள்ளது. 40 ஆண்டுகளாக காஷ்மீரை கொள்ளையடித்த தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவித்தார்.

பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி

தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள்தான் கடந்த 40 ஆண்டுகளாக காஷ்மீரின் ஆட்சி நிர்வாகத்தில் மாறி மாறி இருந்து வந்தன. அவற்றின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக காஷ்மீரை  கொள்ளையடித்த தலைவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என ஜே.பி. நட்டா தாக்கி பேசியுள்ளார். 

Most Popular

“அவ கிட்ட போயிட்டு என்கிட்டே வராதே” -நாகேஷுக்கு ஏற்பட்ட கள்ள தொடர்பால் மனைவி திட்டினார் -அதுக்கு நாகேஷ் பண்ண கிரைம் வேலைய பாருங்க ..

கர்நாடகாவில் உள்ள பெங்களூருவின் மராத்தஹள்ளி மாவட்டத்தில் நாகேஷ் என்ற மேஸ்திரி தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகலோடு வசித்து வந்தார் ,இந்நிலையில் நாகேஷுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு விதவை பெண்ணுடன் கள்ள...

“நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?”- தங்கையை காதலித்த வாலிபரை வீடு புகுந்து கொலை செய்த அண்ணன்

"நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?" என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கையின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் வாலிபர். இந்த சோக சம்பவம் தேவகோட்டையில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம்,...

விமானப்படையின் உதவியை நாடினார் கேரள முதல்வர்; என்ன காரணம்?

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி, பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இன்று காலை திடீரென...

மதுரை உலைப்பட்டியில் தொல்லியல் ஆய்வு வேண்டும்! – சீமான் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டியில் தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளதால் அங்கு விரிவான ஆய்வு மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...