ஸ்மார்ட்போன் வாங்க காசில்லை… கொள்ளையடிக்கக் கிளம்பிய சிறுவன்!

14 வயது சிறுவன் தொடர் கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. தன்னுடைய நண்பர்கள் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதைப் பார்த்த சிறுவன் தானும் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளான். ஆனால் வாங்க காசில்லை. அதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி கொள்ளையடித்தல்.

ஜூன் 9 அன்று கபன் பார்க் காவல் நிலையத்தின் எல்லைப் பகுதிக்குள் மூன்று தொடர் கொள்ளைசம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில், சிறுவன் முதலில் விட்டல் மல்லையா சாலையில் அமைந்துள்ள இரண்டு கடைகளுக்குள் நுழைந்தான். அந்த இரு கடைகளின் கல்லாவில் காசில்லாததால் ஏமாற்றமடைந்த சிறுவன் செயின்ட் மார்க்ஸ் சாலையில் அமைந்துள்ள மூன்றாவது கடைக்குள் நுழைந்தார். அங்கு அவனுக்கு ரூ .4,000 கிடைத்துள்ளது. பின்னர், லாவெல் சாலையில் அமைந்துள்ள நான்காவது கடைக்குள் நுழைத்த அவனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. கடையில் 4 லட்சம் ரொக்கப் பணம் இருந்துள்ளது.

Rep Image

தொடர் கொள்ளை தொடர்பான உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீஸ் விசாரணையைத் தொடங்கினர். அப்பகுதியில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்த போலீஸ் திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டனர். பின்னர் வீட்டிற்குச் சென்ற பார்த்த போது திருடியது 14 வயது சிறுவன் என்று தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாததே தன்னைத் திருடத்தூண்டியது என்று சிறுவன் தெரிவித்துள்ளான்.

நாளுக்கு நாள் அதிகரித்து அவரும் ஸ்மார்ட்போன் மோகம் இன்னும் என்னெவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ?

Most Popular

ஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்!

தேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது!

இன்றைய ராசிபலன்கள் 05-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கியது. 100 கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இன்று நிஜமாக...

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா

மும்பையை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதுல் பட்கல்லர் அண்மையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்....