ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

 

ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிய நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது.

ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உன்சூர் தாலுகாவில் உள்ள பிளிகெரே அடுத்த அய்யரஹள்ளி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அய்யரஹள்ளியில் வசித்து வந்த நான்கு வயது சிறுமி கவுசி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிரிகதானஹள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கிறாள். அங்கே 5 ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென்று ஐந்து ரூபாய் நாணயத்த விழுங்கிவிட்டாள் கவுசி.

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறாள் கவுசி. இதைப்பார்த்து பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்த மருத்துவர்கள் கவுசியை தூக்கிக்கொண்டு மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கவுசி விழுங்கிய ஐந்து ரூபாய் நாணயத்தை மீட்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருந்தபோதே கவுசி பரிதாபமாக உயிரிழந்துவிட்டாள்.

அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று தலையில் அடித்துக்கொண்டு கதறி உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.