ஒரே மாதத்தில் குவிந்த 4 டன் இ-வேஸ்ட் குப்பைகள்: சென்னைக்கு அனுப்பிய ஈரோடு மாநகராட்சி

ஒரே மாதத்தில் குவிந்த 4 டன்  இ-வேஸ்ட் குப்பைகள்:  சென்னைக்கு அனுப்பிய ஈரோடு  மாநகராட்சி

ஈரோடு மாநகராட்சி கோவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4 மண்டலங்களிலும் மக்கும் ,மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தினமும் 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பையை உரமாக பயன்படுத்த அனுப்பிவைக்கப்படுகிறது.

ஒரே மாதத்தில் குவிந்த 4 டன்  இ-வேஸ்ட் குப்பைகள்:  சென்னைக்கு அனுப்பிய ஈரோடு  மாநகராட்சி

மக்காத குப்பைகள் மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதவிர இ-வேஸ்ட் குப்பைகளான எலக்ட்ரான் எலக்ட்ரானிக் கணினி கழிவுகள் குப்பைகளுடன் சேராமல் தனியாக சேகரிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள ஒரு லட்சத்தி முப்பதாயிரம் வீடுகளில் சுமார் நான்கு டன் இ-வேஸ்ட் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.

ஒரே மாதத்தில் குவிந்த 4 டன்  இ-வேஸ்ட் குப்பைகள்:  சென்னைக்கு அனுப்பிய ஈரோடு  மாநகராட்சி

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு மாநகர் பகுதியில் சேகரிக்கப்படும் இ-வேஸ்ட் குப்பைகள் மீண்டும் ஈரோடு நகரில் எந்த இடத்திலும் ஒரு இடத்திலும் கொட்டாதவாறு மாதம் ஒரு முறை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த குப்பைகள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் இதற்கென குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து அனுப்பி வைக்கப்படும் என்றனர்.