ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை கைவிடுவதற்கான 4 காரணங்கள்

 

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை கைவிடுவதற்கான 4 காரணங்கள்

பசிக்காகச் சாப்பிடுவது எனும் பழக்கம் பலரிடம் போய்விட்டது. மாறாக, சுவைக்காகச் சாப்பிடுவோர் அதிகரித்து வருகின்றனர். நல்ல சுவையோடு சாப்பிட ஆசைப்படுவது தவறல்ல. ஆனால், ஆரோக்கியம் தராத சுவை என்றால்கூட விட்டுவிடலாம். ஆனால், நல்ல சுவையாக இருக்கும், அதேநேரம் ஆரோக்கிய கேட்டையும் வர வழைத்து விடும் என்றால் நிச்சயம் அந்தச் சுவையை ஒதுக்க வேண்டும்தான்.

பத்தாண்டுகளுக்கு முன் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் திறக்கப்பட்டிருக்கிறது. அவற்றிலிருந்து வாரம் ஒருமுறையோ மாதம் ஓரிரு முறைகளோடு வீட்டுக்கு உணவு வாங்கி வருவார்கள். ஒரு முறைக்கும் மறு முறைக்கும் நீண்ட இடைவெளி இருந்ததால் உடலின் ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் கேடு விளைவிக்க வில்லை.

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை கைவிடுவதற்கான 4 காரணங்கள்

ஆனால், தற்போது வாரத்தில் ஓரிரு நாள் மட்டுமே ஃபாஸ்ட் ஃபுட் இல்லாமல் சாப்பிடுகிறார்கள். அதுவும் சிலவகை நூடுல்ஸ் வகைகளை வீட்டிலேயே அடிக்கடிச்செய்து சாப்பிடுகிறார்கள். இதனால், அடிக்கடி ஃபாஸ்ட் ஃபுட் நம் உடலுக்குச்  செல்ல தொடங்கி விட்டது. அதனால், ஆரோக்கிய கேட்டை அதிகம் செய்ய ஆரம்பித்து விட்டது.

ஃபாஸ்ட் ஃபுட்டில் சுவைக்காக சேர்க்கப்படும் சில பொருட்கள் குடும்பத்தினரை சுண்டி இழுக்கும். அந்தச் சுவைக்கு அடிமையாக்கி விடச் செய்து விடும். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு   பெரும் தீங்கை விளைவித்துவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம். அந்தளவுக்கு என்ன செய்துவிடும் என்று கேட்பவர்களுகாக நான்கு காரணங்கள். இதன்மூலம் நீங்கள் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டால் மகிழ்ச்சியே.

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை கைவிடுவதற்கான 4 காரணங்கள்

ஒன்று: ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் நார்சத்து, வைட்டமின், வேறுவகையான சத்துகள் என எதுவும் இருப்பதில்லை. அதனால், முதலில் அது சிக்கலை ஏற்படுத்துவது செரிமானத்தில்தான்.

ஓர் உணவு சரியான நேரத்தில் ஜீரணம் ஆனால் மட்டுமே அடுத்த வேளை உணவை எடுத்துக்கொள்ள முடியும். அதைத் தடுக்கிறது ஃபாஸ்ட் ஃபுட்கள். இதிலும் சத்து இல்லாத நிலையில் உடலுக்கு கேடாகவே முடியும்.

இதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் பற்றாக்குறையையும் ஃபாஸ்ட் ஃபுட்கள் ஏற்படுத்தி விடுகின்றன.

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை கைவிடுவதற்கான 4 காரணங்கள்

இரண்டு: ஃபாஸ்ட் ஃபுட்களில் அதிகளவில் கொழுப்பும் கலோரிகளையும் தரும் பொருட்களே இருக்கின்றன. அதனால், தினமும் சாப்பிடும் மனிதர்களுக்கு உடல் பருமனாகி விடுகிறது. கொழுப்புகள் உடலின் கட்டிகளாக மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது. உடல் பருமன் தேவையற்ற நோய்களை அழைத்து வருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்க்க வேண்டியதற்கு இது முக்கியமான காரணம்.

மூன்று: செரிமானச் சிக்கல், கொழுப்பு அதிகரிப்பு, சத்து குறைபாடு ஆகியவை சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் மிக முக்கியமான பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால், உங்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படக்கூடும்.

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை கைவிடுவதற்கான 4 காரணங்கள்

நான்கு: குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் ஃபுட் கொடுப்பதால், அவர்களின் உணவுப் பழக்கமே மாறிவிடுகிறது. ஆரோக்கியமான உணவு முறையை அவர்கள் அறிந்துகொள்ளாமலே சென்று விடுகிறார்கள். அல்லது ஆரோக்கியமான நமது பாரம்பர்ய உணவு முறையை அவர்கள் வெறுக்கிறார்கள்.

ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதுதான் நாகரிகமானது என்று அவர்கள் மனதளவில் கருதத் தொடங்கி விடுகிறார்கள். இந்த மனநிலை ரொம்பவே ஆபத்தானது. ஏனெனில், அவர்களின் உடல் உறுப்புகள் வளரும் காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் அவசியம் தேவை. அதைத் தவிர்ப்பது உடல் வளர்ச்சிக்கு பெரும் கேடாக முடியும். இன்னும் அறுபது, எழுபது ஆண்டுகள் வாழ விருக்கும் அவர்களின் நீண்ட கால வாழ்க்கைக்கு ஒத்துழைக்கும் உடல் உறுப்புகளைப் பெறுவது அவசியம். அதை இந்த ஃபாஸ்ட் புட் கலாச்சாரம் தடுக்கிறது.

இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. அவை உங்களை அச்சமூட்டி விடக்கூடும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் உணவுமுறையிலிருந்து விலகி ஆரோக்கிய உணவு முறைக்கு மாறுங்கள்.