இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண் உட்பட 4 பேர் மீட்பு

 

இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண் உட்பட 4 பேர் மீட்பு

திருவள்ளூர்

சென்னை அடுத்த குன்றத்தூர் – ஶ்ரீபெரும்புதூர் சாலையில் இரவில் இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகளவு உபரிநீர் திறக்கப்பட்டு இருப்பதால் குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண் உட்பட 4 பேர் மீட்பு

இந்த நிலையில் நேற்று இரவு நந்தம்பாக்கத்தை சேர்ந்த அன்சாரி(20), அவரது சகோதரி தமிமா மற்றும் ஆனந்த்(25), அவரது நண்பர் ராஜ்(25), ஆகியோர் போலீசாரின் கட்டுப்பாடுகளையும் மீறி, 2 மோட்டார் சைக்கிள்களில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும், சாலையை கடக்க முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர்கள், அருகாமையில் இருந்த மணல் திட்டை பிடித்துகொண்டு பாதுகாப்பாக நின்றனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண் உட்பட 4 பேர் மீட்பு

ஆனால், அவர்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க முடியாத நிலையில், அங்கு வந்த விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், நீண்டநேர போராட்டத்திற்கு பின் கயிறுகள் கட்டி 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, குன்றத்தூர் காவல் நிலையம் அழைத்துச்சென்ற போலீசார், அவர்களுக்கு அறிவுரை வழங்கி வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் நீரில் அடித்துச்செல்லலப்பட்ட நிலையில், இரவுநேரத்தில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.