இ-பாஸ் இல்லாததால் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 4 பேர்!

 

இ-பாஸ் இல்லாததால் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 4 பேர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 17 ஆம் தேதி நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பல தளர்வுகள் செய்யப்பட்டன. அதன் படி கிட்டத்தட்ட 61 நாட்களுக்கு பிறகு இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் இல்லாததால் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 4 பேர்!

விமானத்தில் தமிழகம் வரும் பயணிகள் மூலம், கொரோனா பரவாமல் இருக்க அவர்களை நேரடியாக வீட்டுக்கு அனுமதிக்காமல் அரசின் கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப் படுகின்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு வந்த பிறகே வீட்டுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல அவர்களது கையில் சீல் வைப்பது போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் இ-பாஸ் கட்டாயமாக பெற்றுக் கொண்டு தான் வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இ-பாஸ் இல்லாமல் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்த 4 பேர் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.