ஆக்சிஜன் விநியோகத்திற்கு… முருகானந்தம் தலைமையில் குழு அமைப்பு

 

ஆக்சிஜன் விநியோகத்திற்கு… முருகானந்தம் தலைமையில் குழு அமைப்பு

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால், ஆக்சிஜன் கொள்முதல் செய்யும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக துர்காபூரிலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை சென்னை தண்டையார்பேட்டைக்கு வரவுள்ளது.

ஆக்சிஜன் விநியோகத்திற்கு… முருகானந்தம் தலைமையில் குழு அமைப்பு

அந்த ரயில் சென்னைக்கு வந்த பிறகு தேவையான பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு முறைப்படுத்த 4 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக தொழில்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு எந்த மருத்துவமனைக்கு எவ்வளவு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்து ஆக்சிஜனை விநியோகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.