‘5 டன் ரேஷன் அரிசி கடத்தல்’ 4 பேர் கைது!

 

‘5 டன் ரேஷன் அரிசி கடத்தல்’ 4 பேர் கைது!

கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக தமிழகத்தில் ரேஷன் அரிசி பதுக்கலும் கடத்தலும் தொடர்கதையாகி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை வாங்கி, சிலர் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு, ரேஷன் கடை ஊழியர்களும் உடைந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘5 டன் ரேஷன் அரிசி கடத்தல்’ 4 பேர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, அந்த வழியே வந்த வாகனம் ஒன்றில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.