ஆம்புலன்ஸில் காத்திருந்த 4 கொரோனா நோயாளிகள் பலி… சேலம் அரசு மருத்துவமனையில் அவலம்…

 

ஆம்புலன்ஸில் காத்திருந்த 4 கொரோனா நோயாளிகள் பலி… சேலம் அரசு மருத்துவமனையில் அவலம்…

சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களில் காத்திருந்த 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு 500-க்கும் மேலாக பதிவாகி வருகிறது. இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டதால், புதிதாக சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆம்புலன்ஸில் காத்திருந்த 4 கொரோனா நோயாளிகள் பலி… சேலம் அரசு மருத்துவமனையில் அவலம்…

இதேபோல், சேலம் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தப்பாடு நிலவி வருவதால், அங்குள்ள கொரோனா நோயாளிகள், அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இடநெருக்கடியால் அந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலையில், சிலருக்கு ஆம்புலன்ஸ்களில் வைத்தே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் நீண்ட நேரம் சிகிச்சை பெறுவதற்காக காத்திருந்தனர். அப்போது, 20 வயது பெண் உள்பட 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.