கொரோனா பரவல் எதிரொலி: தமிழ்நாட்டில் நீட் தேர்வு மையங்களை உயர்த்திய மத்திய அரசு!

 

கொரோனா பரவல் எதிரொலி: தமிழ்நாட்டில் நீட் தேர்வு மையங்களை உயர்த்திய மத்திய அரசு!

நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்பத்திற்கு மத்திய கல்வி அமைச்சம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனுப்பும் பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்கள் எண்ணிக்கை 155 இருந்து 198ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி: தமிழ்நாட்டில் நீட் தேர்வு மையங்களை உயர்த்திய மத்திய அரசு!

அதேபோல நீட் தேர்வு எழுதும் மையங்களை அதிகப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் கோரிக்கை வைத்தன. தமிழ்நாட்டிலும் இதுதொடர்பாக எம்பிக்கள் கேள்வியெழுப்பினர். அதன் விளைவாக தேர்வு மையங்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மேலும் நான்கு மையங்களை உயர்த்துவதாக கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தற்போது கூடுதலாக செங்கல்பட்டு, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நகரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தர்மேந்திர பிரதானை சந்தித்தபோது இவ்விவரத்தைச் சொல்லியிருக்கிறார்.