கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

 

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

உதகை அருகே விவசாயத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

மார்லிமந்து பகுதியில் வசித்து வருபவர் சந்திரன் (42). விவசாயியான இவர் மனைவி கீதா (35) மகள் ரக்க்ஷிதா(16) மகன் விஸ்வந்தர் (12) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் குத்தகைக்கு நிலத்தை வாங்கி மலை காய்கறி விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் சந்திரனின் உறவினரான நந்தகுமார் என்பவருக்கு அலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு சந்திரன் வீட்டில் யாரும் இல்லாததால் மாடு கத்துவதாக கூறியுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த நந்தகுமார் சந்திரனின் வீட்டு கதவு உள் பக்கம் தாள் போடபட்டு இருப்பதை கண்டு சந்தேகமடைந்து புதுமந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சந்திரன் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவர்களது குழந்தைகள் பூச்சு கொல்லி மருந்து குடித்து இறந்த நிலையிலும் இருப்பதை பார்த்தனர்.

அவர்களது உடல்களை கைப்பற்றிய புதுமந்து காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையில் விவசாயத்தில் தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் மேல் கடன் வாங்கியதும் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததும், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்ற கோணத்திலும் புதுமந்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.