#BREAKING செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 9 பேர் பலி

 

#BREAKING செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 9 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீயாய் பரவிவருகிறது. இரண்டாம் அலையில் பாதிக்கப்படுவோருக்கு வித்தியாசமான அறிகுறிகளும், பாதிப்புகளும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா தொற்றில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர், படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் நடத்த இச்சம்பவம் தமிழகத்திலும் அரங்கேறியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 9 பேர் பலி

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இன்று இரவு 10 மணியளவில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். முதலில் 4 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நள்ளிரவாகியும் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை தீர்ந்தபாடில்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்த உயிரிழப்பு நிகழ்ந்தது. நள்ளிரவில் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நீடிக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.